வணக்கம் பூஞ்சிட்டுக்களே!

கோடை விடுமுறையில் பொழுதாக்கம் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறீர்களா?
வாங்க, நா பிறழ்ச் சொற்கள் சிலவற்றை முயற்சித்துப் பார்த்து நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்வோமா?

Tongue Twister

“இது யாரு தச்ச சட்டை? எங்க தாத்தா தச்ச சட்டை.”
“இது யாரு தச்ச சட்டை? எங்க தாத்தா தச்ச சட்டை.”

என்ன செல்லங்களே, எனக்கு ச்சச்ச தட்டை னு வருது, உங்களுக்கு எப்படி வருதுனு சொல்லுங்க…

இன்னும் இது மாதிரி எனக்குத் தெரிஞ்சத சொல்றேன், நீங்களும் சொல்லுங்க.

“கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்டை கட்ட முட்டை”
“கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்டை கட்ட முட்டை”

ஹ ஹா, ஜாலியா இருக்கு இல்ல.

அடுத்து…

“இரண்டு செட்டு சோள தோசையில, ஒரு செட்டு சோள தோசை, சொந்த சோள தோசை”

“இரண்டு செட்டு சோள தோசையில, ஒரு செட்டு சோள தோசை, சொந்த சோள தோசை”

சொல்ல முடியுதா குட்டிஸ், வார்த்தைகள் மாறும்பொழுது சிரிப்பு வருது இல்ல, நண்பர்களைச் சிரிக்க வைக்கவும் பயன்படுகிறதே!

அடுத்து நம்ம திருக்குறள்ளையும் சில குறள் இந்த மாதிரி இருக்கும்.

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை”

பொருள் விளக்கம்: துப்பார்க்கு = உண்பார்க்கு, துப்பாய = உணவு ஆகி, துப்பு ஆக்கி = உடலை வலிமைப் படுத்துகிறது. துப்பார்க்கு = அனுபவிக்கும் அறிவுள்ளார்க்கு, துப்பாய = பொலிவு, வலிமையுடன் தூய்மையான உடலையும் உண்டாக்குகிறது. தூஉம் மழை = தூய்மையாகப் பெய்கிற மழை.

அப்புறம் ஒரு பெரிய நா பிறழ் வாக்கியம் ஞாபகம் வருதே எனக்கு,

“பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்தப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர் வந்து அந்தப் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?”.

சொல்லிப் பார்த்து முதல்ல இத மனப்பாடம் பண்ணனும் போலயே..

இன்னும் சில எளிமையானவற்றைச் சொல்கிறேன்,

“ப்ளூ லாரி உருளுது பிரளுது”
“கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது”

உங்களுக்குத் தெரிஞ்சதையும் எனக்குச் சொல்லிக் கொடுங்க சிட்டுக்களே.

What’s your Reaction?
+1
2
+1
4
+1
2
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest
5 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments