வணக்கம்   பூஞ்சிட்டுகளே!

நம்ம எல்லாருக்கும் ஒரு பேரு இருக்கு, இல்லையா ? அந்த பேருக்கு ஒரு அர்த்தமும் இருக்கு இல்லையா? 

அது போல நம் வீட்டுல இருக்கிற நிறைய பொருள்களுக்கான அர்த்தமும் அந்த பேருலயே இருக்கும். உதாரணத்துக்கு, நம்ம வீட்டுல இருக்குற நாற்காலி- நாலு கால் இருக்கிறதால அதுக்கு நாற்காலின்னு பேரு. இப்படி வெச்ச பேருலயே  அந்த பேருக்கான காரணமும் இருக்கறத, நம்ம தமிழ் மொழில “காரணப்பெயர்” ன்னு சொல்லுவாங்க.

இப்படி  நம்ம தமிழ் நாட்டுல இருக்கிற ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு கிராமத்துக்கும், அவ்வளவு ஏன், நம்ம ஊருல இருக்கிற குளம், ஆறு, ஏரி, மலை, கடற்கரைன்னு ஒவ்வொன்னுத்துக்கும் பேர் வந்ததுக்குப் பின்னாடி ஒரு குட்டிக்கதையே இருக்கும். அப்படிப்பட்ட கதைகளையும் அதற்கான காரணத்தையும் தான் இந்த பகுதில ஒவ்வொரு மாதமும் பாக்கப்போறோம்!

என்ன பூஞ்சிட்டுகளே உங்க ஊர்க்கதை கேட்க நீங்க தயாரா?

இன்னைக்கு நாம கதைக்கேட்க போற ஊர் – சட்ராஸ்

மெட்ராஸ் தெரியும், சென்னையோட பழைய பேர். அதென்ன சட்ராஸ்? ன்னு யோசிக்கிறீங்களா?

சட்ராஸ், செங்கல்பட்டு மாவட்டத்துல இருக்க ஒரு சோழமண்டல(கோரமண்டல) பகுதி. இந்த ஊருல இருந்த விஷ்ணு கோயில் பேரால  “சதிரவாசகன் பட்டிணம்”ன்னு அழைக்கப் பட்ட ஊர், கொஞ்ச காலத்துக்கு அப்புறம் மருவி “சதுரங்கப்பட்டினம்”ன்னு மாறி, அதுக்கப்பறம் வந்த டச்சுக்காரர்களால் “சட்ராஸ்”ன்னு, அழைக்கப்பட இப்போ அதுவே பேரா ஆகிருச்சு. ‘சட்ராஸ்’ல..தப்பு..தப்பு. சதுரங்கப்பட்டினத்துல இருக்கிற டச்சு கோட்டை இன்னைக்கும்  ரொம்ப அழகா இருக்குமாம்.    

கொறிக்க கொஞ்சம் கூடுதல் சேதி:

உங்க ஊரோட முடிவுல ‘பாக்கம்’ ன்னு இருந்தா உங்க ஊர் ஆறுகளை மைய்யமாகக் கொண்ட இடம்ன்னு அர்த்தம்.

உதாரணம்: ஊரப்பாக்கம் , செம்பாக்கம்

உங்க ஊரோட முடிவுல ‘வாக்கம் ன்னு இருந்தா உங்க ஊர் ஏரிகளை  மைய்யமாக்க கொண்ட இடம்ன்னு அர்த்தம். உதாரணம்: புரசைவாக்கம்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *