புதிர்வனம்

1. பாட்டி வீட்டு தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள். அவன் யார்? 2. சொன்னதை சொல்லும் பொண்ணுக்கு, பச்சை பாவாடை கேட்குதாம். அவன் யார்? 3. வண்ண பட்டு சேலைக்காரி, நீல பட்டு ரவுக்கைக்காரி. அவன் யார்? 4. உரச உரச குழைவான், பூசப் பூச மனப்பான். அவன் யார்? 5. கிண்ணம் போல் பூ பூக்கும், பானை போல் காய் காய்க்கும்.  யார்? பதில்கள் அடுத்த பக்கத்தில்…மேலும் படிக்க…

1. மண்ணுகுளே கிடப்பான் , மங்களகரமானவன் அவன் யார்?              2. தொப்பி போட்ட காவல்காரன், உரசி விட்டால் சாம்பல் ஆவான். அவன் யார்? 3. ஊர் சுற்ற கூட வருவான் ஆனால் வீட்டுக்குளே வரமாட்டன். அவன் யார்? 4. ஏழு குதிரை பூட்டிய தேரில் வரும் மன்னவன். அவன் யார்? 5. தொட்டு விட்டால் ஏதும் இல்லை அரைத்து விட்டால் சிவந்துடுவான். அவன் யார்? பதில்கள் அடுத்தப் பக்கத்தில்…மேலும் படிக்க…

இந்தக் கட்டத்திற்குள் பல தமிழ் வார்த்தைகள் மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ, இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவோ ஒளிந்து இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து கீழே உள்ள கமெண்ட்ஸில் பதிவிடவும்.மேலும் படிக்க…

1. கொடுக்க முடியும், எடுக்க முடியாது. அது என்ன? 2. தலைக்குக் குடை, காலில் முள். அது என்ன? 3. ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம். அவன் யார்? 4. காகிதம் கண்டால் கண்ணீர் விடும், முக்காடு போட்டால் முனையில் அமரும். அது என்ன? 5. இவர்கள் இருவரும் சேர்ந்தால் ஒரு தலை உருளும், யார் இவர்கள் ? — பதில்கள் அடுத்த பக்கத்தில்மேலும் படிக்க…