சிறார் நூல் அறிமுகம்

Karathe Aadu 1 400x400 1

இக்கதையில் கராத்தே முட்டன் ஆடு என்ற ஆட்டுக்கடா செய்யும் சாகசங்கள் விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டுள்ளனமேலும் படிக்க…

jimmavin kaipesi FrontImage 364

எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரக்கூடிய பல புதிய அறிவியல் தொழில்நுட்ப விஷயங்களைச் சிறுவர்க்குச் சுவாரசியமாகச் சொல்லி, அறிவியலில் நாட்டம் ஏற்படுத்தும் சிறந்த சிறார் அறிவியல் புனைகதைமேலும் படிக்க…

maaya maan

மாய மான் – 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான சுவாரசியமான வண்ணப் படக்கதை. ஃபையானா சொலாஸ்கோ (FAINNA SOLASKO) ஆங்கிலத்தில் எழுதிய கதையைத் தமிழில் பெயர்த்துள்ளார், ஆசிரியர் சரவணன் பார்த்தசாரதி.மேலும் படிக்க…

vettaiyadu vilayaadu

வேட்டையாடு விளையாடு – நம் பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமானதல்ல’ அனைத்து உயிர்கட்கும் சொந்தமானது. பூமியைப் பாதுகாத்து, நம் சந்ததிக்கு விட்டுச் செல்வது நம் அனைவரின் கடமை என்று ஆசிரியர் இந்நூலில் வலியுறுத்தியிருக்கின்றார். காட்டுயிர்கள் பற்றியும், அவை வேட்டையாடும் முறை பற்றியும் சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் அறிந்து கொள்ள இந்நூல் உதவும்.மேலும் படிக்க…

daalum zhiyum 1 1631x2445 1

டாலும் ழீயும் சிறுவர் நாவல் ஆசிரியர் விழியன் வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18  செல் (+91)8778073949 விலை ரூ 40/-. கடலில் டால் என்கிற டால்பினும், ழீ என்கிற தங்க மீனும், நெருங்கிய நண்பர்கள்.  இரண்டும் ஒன்றாகப் பள்ளிக்குச் செல்வதும், திரும்புவதும் வழக்கம்.  ஒருநாள் இரண்டும் கடல் பற்றிய ஒரு வரலாற்று நூலை வாசிக்கின்றன. அந்நூலில் இருந்து கடல்வாழ் உயிரினங்கள் பற்றியும், அவற்றின் உணவு முறைகள், மீனவர்களின் வேட்டை ஆகியவைமேலும் படிக்க…

boomiku adiyil oru marmam FrontImage 831

பூமிக்கடியில் ஒரு மர்மம்  இளையோர் நாவல் ஆசிரியர்:- யெஸ்.பாலபாரதி வானம் பதிப்பகம்,சென்னை-89 செல் 9176549991 விலை ₹ 140/- 8 ஆம் வகுப்பு மாணவர்களான ஜெயசீலன், அன்வர், புகழ்மணி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள்.  வெளியூரிலிருந்து ஜெயசீலன் வீட்டுக்கு, ஜெசி, ஜெமி, கண்ணன் ஆகியோர் வந்து தங்கியிருக்கிறார்கள் கண்ணன் ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்பட்டவன்.   ஒருநாள் இவர்கள் ஊர் சுற்றிய போது, கோவிலில் ஒரு சுரங்கம் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். மறுநாள்மேலும் படிக்க…

oru poo oru bootham FrontImage 670

இத்தொகுப்பில் இது 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கான 12 கதைகள்  உள்ளன. இவை பல மொழிகளிலிருந்து, தமிழாக்கம் செய்யப்பட்டவை.  மேலும் படிக்க…

kaalakkanavugal

நம் வேலைகளைச் சரியாக நிறைவேற்ற உதவுகிற ஒரு கோட்பாடு தான், நேர மேலாண்மை என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்ளும் விதத்தில், விளக்கும் புத்தகம்.மேலும் படிக்க…

vilangugalin pakkikoodam FrontImage 972

பள்ளிக்கூடத்தை, அவர்கள் விரும்பும் இடமாக மாற்ற, அவர்களுக்குப் பிடித்த விலங்குகளைக் கொண்டு பள்ளிக்கூடத்தை உருவாக்கியிருக்கிறார் இச்சிறுவர் நாவலின் ஆசிரியர்மேலும் படிக்க…

kanavinai pinthodarnthu FrontImage 249

10 வரலாற்றுக் கதைகள் உள்ள இந்நூலில், பழங்கால இந்திய வரலாற்று உண்மைகளைக் கற்பனையான கதை மாந்தர்கள் மூலம், சுவாரசியமாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர். மேலும் படிக்க…