mayil muttai

ஆசிரியர்:- கன்னிக்கோவில் இராஜா

வெளியீடு:- லாலிபாப் சிறுவர் உலகம் சென்னை-18.

விலை ரூ 100/-.

இத்தொகுப்பில், 12 கதைகள் உள்ளன.  “பிடிங்க பிடிங்க மயில் முட்டையைப் பிடிங்க” என்ற முதலாவது கதையில், மலை மேட்டிலிருந்து உருண்டு ஓடும், தன் முட்டையைப் பிடிக்கச் சொல்லி நத்தை, மரவட்டை, அணில் ஆகியவற்றை ஒவ்வொன்றாக மயில் கெஞ்சுகிறது.  ஆனால் அவற்றை எல்லாம் தள்ளிக்கொண்டு முட்டை வேகமாக கீழே ஓடுகிறது 

பாம்பு அந்த முட்டையைப் பிடித்துத் தின்ன நெருங்குகிறது.  கடைசியாகக் காட்டுக்கோழியிடம் மயில் விபரத்தைச் சொல்கிறது;  “நீயே பறந்து போய், அதை எடுத்து இருக்கலாமே” என்று அது சொன்னவுடன், மயில் பறந்து சென்று முட்டையைக்  காப்பாற்றுகிறது. 

‘தன் கையே தன் உதவி’, பதற்றம் நம் திறமையை மறக்கடிக்கச் செய்யும், பதற்றத்தில் நம் மூளை வேலை செய்யாது என்ற கருத்தைக் கொண்ட கதையிது.

இதில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கதைகள், இயற்கையையும், சூழலையும் பேணுவதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துபவை. உயிர்களிடத்தில் அன்பு  வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துபவை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments