boomiku adiyil oru marmam FrontImage 831 1

பூமிக்கடியில் ஒரு மர்மம் 

இளையோர் நாவல்

ஆசிரியர்:- யெஸ்.பாலபாரதி

வானம் பதிப்பகம்,சென்னை-89

செல் 9176549991

விலை ₹ 140/-

8 ஆம் வகுப்பு மாணவர்களான ஜெயசீலன், அன்வர், புகழ்மணி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள்.  வெளியூரிலிருந்து ஜெயசீலன் வீட்டுக்கு, ஜெசி, ஜெமி, கண்ணன் ஆகியோர் வந்து தங்கியிருக்கிறார்கள் கண்ணன் ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்பட்டவன்.  

ஒருநாள் இவர்கள் ஊர் சுற்றிய போது, கோவிலில் ஒரு சுரங்கம் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். மறுநாள் இவர்களுடன் அன்வரும், புகழ்மணியும் சேர்ந்து கொள்ள, எல்லோரும் அந்த இருட்டுச் சுரங்கத்துக்குள் செல்கிறார்கள். 

அதன் உள்ளே பயங்கரமான கரடி போன்ற கருப்பு உருவத்தைக் கண்டு பயந்து அலறுகிறார்கள்.  அந்த உருவத்திடமிருந்து, பிரச்சினை ஏதுமின்றி அவர்கள் தப்பித்தார்களா? சுரங்கத்தின் உள்ளே புதையல் ஏதும் இருந்ததா? என்பது போன்ற விபரங்களைத் தெரிந்து கொள்ள, நூலை வாங்கி வாசியுங்கள்.

இந்தப் பூமி அனைவருக்கும் சொந்தமானது; மாற்றுத் திறனாளிகளை நாம் வெறுத்து ஒதுக்காமல், அவர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்ற கருத்தை, இளையோர் மனதில் விதைக்கும் நாவல். சாகசமும், சஸ்பென்சும் கலந்த இளையோர் நாவல்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *