
ஆசிரியர்:- ஹரிவர்ஷ்னி ராஜேஷ்
(மகேஸ்வரி பதிப்பகம், விருதுநகர்) லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை.
விலை ரூ 80/-
கோவை தொண்டாமுத்தூர் உலியம்பாளையத்தைச் சேர்ந்த ஹரிவர்ஷ்னி ராஜேஷ். தம் ஒன்பதாவது வயதில், இந்தச் சிறுவர் கதை நூலை வெளியிட்டுள்ளார்.
இதில், மொத்தம் 9 சிறுவர் கதைகள் உள்ளன. ஒரு கிராமமே குகைக்குள் பூதம் இருப்பதாக நினைத்துப் பயப்படுகிறது. ஆனால் அறிவழகன் என்ற பையனுக்கு, இதில் சந்தேகம் ஏற்படுகின்றது. அவன் யாருக்கும் தெரியாமல் அந்தக் குகைக்குச் செல்கிறான். அங்குத் திருடர்கள் இருப்பதைக் கண்டுபிடிக்கிறான். கிராம மக்கள் முன்னிலையில் குகையில் இருந்து திருடர்களை வெளிக்கொண்டு வர, அவன் என்ன உத்தி பயன்படுத்தினான் என்று இந்நூலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இதில் உள்ள எல்லாக் கதைகளுமே, வெற்றிவேற்கை நீதி நூலில் காணப்படும் நீதிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியிருக்கிறார். இந்தக் கதைகளுக்கு உயிரோட்டமாய், இவர் அக்கா வர்த்தினி ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.