‘தேன்’மிட்டாய் தேடிப் போறோம்
ஆசிரியர் : ஸ்ரீஜோதி விஜேந்திரன்
சுவடு வெளியீடு
விலை : ரூ. 60
கதை சொல்லியும், VijosBookBarn என்ற நூலகத்தின் நிறுவனருமான ஸ்ரீஜோதி விஜேந்திரன் அவர்களின் புத்தகம், ” ‘தேன்’ மிட்டாய் தேடிப் போறோம்.
தேன் மிட்டாய் சாப்பிட விரும்பும் சிறுவன் முகிலனுக்கு, அவனது அம்மா வாங்கிக் கொடுத்தாரா? முகிலனுக்கு அவனது நாய்க்குட்டி, தேன் மிட்டாய் சாப்பிட எப்படி உதவியது, தேனை விட சுவையான பண்டத்தை, காட்டில் முகிலனுக்கு யார் யாரெல்லாம் கண்டுபிடிக்க உதவினார்கள், அதன் சிறப்புகள் என, பல்வேறு தகவல்களின் களஞ்சியமாக, இந்நூலை ஆசிரியர் எழுதி உள்ளார்.
சின்னஞ்சிறு வாக்கியங்கள், பல அற்புதமான தகவல்கள், குழந்தைகளுக்கு குதூகலமூட்டும் செயல்பாடுகளுடன் ஆசிரியர் ஸ்ரீஜோதி அவர்கள் உருவாக்கியுள்ள இப்புத்தகம், நிச்சயம் குழந்தைகளைக் கவரும்.
உங்கள் வீட்டு சுட்டிகள் தமிழோடு வளர்ந்து விளையாட, ஒவ்வொரு மாதமும்,உங்களைத்தேடி – பூஞ்சிட்டு