ராமு : அந்த மான் ஏன் கோயிலைச் சுற்றி சுற்றி வருது? சோமு : அது பக்திமான் |
ராமு : ஏன் உங்க பையன் ஸ்கூலில் ஸ்கேல் வைத்துக் கொண்டு தூங்குறான்? சோமு :அவன் அளவோடு தூங்குறான் |
ராமு : பழம் நழுவிப் பாலில் விழுந்து டம்ளர் உடைஞ்சு போச்சு! சோமு : ஏன் ? ராமு : விழுந்தது பலாப்பழம் ஆச்சே! |
ராமு : மரியாதை இல்லாத பூ எது? சோமு : ‘வாடா’ மல்லி |
ராமு : என் பையன் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான். சோமு : ரொம்ப சந்தோஷம், மேலே என்ன படிக்க வைக்கப் போறீங்க? ராமு : செகண்ட் கிளாஸ்தான். |
ராமு : எலிக்கும், மவுஸுக்கும் என்ன வித்தியாசம்?? சோமு : எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுஸுக்கு வால் முன்னாடி இருக்கும் |
ராமு : ஏண்டா லேட்டு..?? சோமு : பள்ளிக்கூடம்.. மெதுவாகச் செல்லவும்னு போர்டு போட்டிருந்துச்சு சார்… |
ராமு : மெக்கானிக்குக்குப் பிடித்த சோப் எது ? சோமு : ‘வீல்’ சோப்! |
ராமு : பேச முடியாத வாய் எது ? சோமு : செவ்வாய் |
What’s your Reaction?
+1
+1
+1
3
+1
+1
+1
கும்பகோணத்தில் வசிக்கிறேன். M.E Computer Science முடித்து விட்ட இல்லத்தரசி நான். எனக்கு கோலம், ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. மேலும் கைவினைப் பொருட்களும் செய்து வருகிறேன்.. 2012 முதல் பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறேன்.