கீச் கீச் கீச்! பூஞ்சிட்டு வந்திருக்கேன்!
ஓடி வாங்க செல்லங்களே!
கணிணியிலும்,தொலைக்காட்சியிலும் பாடம் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்க எல்லோருக்கும் சிட்டுவின் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்!
இந்த இனிய நாளில், நம் நாட்டு விடுதலைக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த தியாகிகளைப் போற்றி வணங்க வேண்டும்;
போன மாதம் மாயக்கட்டம் சரியாகச் செய்து, விடையெழுதிய எல்லோருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும். கதைகளைப் படித்தீர்களா? பிடித்திருந்ததா? கடி ஜோக்கைப் படித்துவிட்டுச் சிரித்தீர்கள் தானே? யாரெல்லாம் ‘நடக்கும் நிறங்கள்,’ சோதனையை வீட்டில், செய்து பார்த்தீர்கள்?
போன மாதம் அறிவித்திருந்த போட்டியில், ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் நன்றி. வெற்றி பெறும் குழந்தைகளின் பெயர்கள் அறிவிப்புகள் பகுதியில் இருக்கு.. பார்த்து வெற்றி பெற்றவங்க சந்தோசமா குதிங்க💐💐. வெற்றி பெறுபவர்களுக்குப் புத்தகங்கள் பரிசாகக் கொடுக்கப்படும். அவரவர்கள் வீட்டு முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். போட்டியில் பங்கெடுத்த அனைவரின் படைப்புகளும் உங்கள் மேடை பகுதியில் இருக்கு. பாருங்க.. உங்க நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லி, காலரைத் தூக்கி விட்டுக்கோங்க💖
இந்த மாத இதழிலும் உங்கள் கற்பனையைத் தூண்ட நிறைய கதைகள் இருக்கு; மூளைக்கு வேலை தர புதிர்வனமும், அறிவியல் சோதனைகளும் இருக்கு; நம் தேசத்தைக் கொண்டாட, தென்னாட்டு ஜான்சிராணி என்று காந்தியால் பாராட்டப்பட்ட ஒரு வீரரைப் பற்றி இவர் யார் தெரியுமா பகுதியில் சொல்லியிருக்கிறோம். நேரம் போக்க குட்டி சமையல், ஆடுகளம், ஜிகினா பக்கங்கள் பகுதிகள் இருக்கு. இது எப்படி இருக்கு பகுதியில் அறிவியல் புத்தகம் ஒன்றைப் பற்றியும், காமிக்ஸ் புத்தகம் ஒன்றைப் பற்றியும் சொல்லியிருக்கிறோம்.
புதிதாக ரொம்பவும் பிரபலமான வெளிநாட்டுக் கதைகளை உங்களுக்குச் சொல்லும் அக்கரை பச்சை பகுதியும், உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லும் சிட்டுவிடம் கேளுங்கள் பகுதியும் சேர்ந்திருக்கு. அடுத்த மாதத்திற்கான போட்டி அறிவிப்புகளும் இருக்கு. ஜாலிதானே? முழு இதழையும் படித்து முடிங்க, இந்த மாதப்போட்டிகளுக்கு உங்க படைப்புகளை இப்போதே தயார் பண்ண ஆரம்பிங்க!.
இன்னொரு முக்கியமான செய்தி. நம் மின்னிதழ் பிறப்பதற்கு காரணமான அண்ணா திராவிடர்குழு நடத்திய குழந்தைகளுக்கான சிறுகதைப்போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. பரிசு பெற்ற அனைவருக்கும் பூஞ்சிட்டு சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐 போட்டியில் பரிசு பெற்ற நூல்களைப் பற்றிய விவரங்கள் இந்த சுட்டியில் உள்ளது.
https://m.facebook.com/story.php?story_fbid=331232084932832&id=100613071328069
இதுவரை படிக்கவில்லை யென்றால் நீங்களும் படிச்சிப் பாருங்க செல்லங்களே! உங்கள் கற்பனையின் சிறகுகள் விரியட்டும்.
நம் மின்னிதழைப் படித்து, உங்கள் கருத்துகளை, எங்களுக்கு feedback@poonchittu.com என்ற மின்னஞ்சலுக்கு மறக்காமல் எழுதியனுப்புங்க.
உங்கள் வீட்டு சுட்டிகள் தமிழோடு வளர்ந்து விளையாட, ஒவ்வொரு மாதமும்,உங்களைத்தேடி – பூஞ்சிட்டு