இரவுப் பறவைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆந்தை. பெரும்பாலான ஆந்தை இனங்கள் பகலில் ஒய்வெஎடுத்து இரவில் வேட்டையாடும் பழக்கம் கொண்டவை. உலகில் 200 வகையான ஆந்தை இனங்கள் உள்ளன. தென் துருவம் தவிர மற்ற இடங்களில் பரவலாக காணப்படுகின்றன. பெரும்பாலும் சிறிய உருவில் (owlets) இருந்தாலும் கொம்பன் ஆந்தை, கூகை போன்று பெரிய உருவிலும் ஆந்தை இனங்கள் உள்ளன.

bird

படத்தில் உள்ளது நம் இடங்களில் காணப்படும் புள்ளி ஆந்தை (spotted owlet). மற்ற பறவைகள் போல் அல்லாமல், ஆந்தைகளின் முகம் தட்டையான அமைப்பு கொண்டது.  “ஆந்தை முழி” என்ற சொலவடைக்கு ஏற்ப கண்கள் பெரியதாக இருக்கும். ஆந்தைகள் தங்கள் தலையை மட்டும் 270° கோணங்களில் திருப்பும் திறன் பெற்றவை.

bird in nest

பழைய மரங்களில் உள்ள பொந்துகளைத் தங்கள் வசிப்பிடமாகக் கொள்ளும். தனியாகவும், சிறு குழுக்களாகவும் காணப்படும். ஆந்தைக் குழுவிற்கு “பார்லிமெண்ட் ” (Parliament) என்று பெயர். இவற்றால் அதன் இறகுகளின்  தன்மையால் சிறிதும் ஓசை இல்லாமல் பறக்க முடியும். பூச்சிகள், எலிகள், மற்றும் சிறிய பாலூட்டிகளை வேட்டையாடி உண்ணும்.  சில இனங்கள் மீன்களை வேட்டையாடி உண்ணக் கூடியவை(Fish owl).

பல கலாச்சாரங்களில் ஆந்தையின் அலறல் அபசகுனமாகக் கருதப்படுகிறது. பயிர்களை நாசம் செய்யும் எலிகளைக் கட்டுப்படுத்த உதவுவதால் ஆந்தை      “விவசாயிகளின் நண்பன்” என்று அழைக்கப்படுகிறது. இதனால் நச்சுத் தன்மை வாய்ந்த பூச்சி மருந்துகளின் உபயோகம் குறைகிறது. நமக்கு உதவும் இப்பறவைகளை காப்பது நம் கடமையாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
6 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments