வணக்கம் குழந்தைகளே!

ரொம்ப நாள் கழிச்சு பள்ளிக்கூடம் திறந்ததால ரம்யாக்கு ரொம்ப மகிழ்ச்சி, நண்பர்களை எல்லாம் நேரில் பார்த்து பல கதைகள் பேசியதில் அலாதி புன்னகை அவள் முகத்தில். இப்படியே  ஒரு வாரம் ஜாலியா போச்சு.  திடீருன்னு ஒரு நாள் ரம்யா ரொம்ப கவலையா உக்காந்திருந்தா. “ஏன் ரம்யா கவலையா உக்காந்திருக்க?”, பக்கத்து வீட்ல இருந்து கேட்டுகிட்டே வந்தாங்க நந்தினி அக்கா.

இல்ல அக்கா, கவனத்தோட படிக்கவே முடியல, அதான் யோசிச்சிட்டே உக்காந்துட்டேன் அப்படின்னு சொன்னா.

elidhaaga

“தீவாளிக்கு இனிப்பு பலகாரம் லாம் நிறைய சாப்ட்ருப்ப இல்லையா, அது மந்தமா இருக்கோ என்னவோ, படிக்கணும்னு முடிவு பண்ணிட்டா ரொம்ப இனிப்பு சாப்பிட கூடாது டா, ஜங்க் ஃபுட் சாப்புட கூடாது”

“ஓ அப்படியா அக்கா”

“ஆமாடா, இது மட்டும் இல்ல, கவனத்தோட படிக்க முடியாததுக்கு இன்னும் நெறைய காரணம் இருக்கு,  நம்ம உடல்நிலை, உணவு முறை, மன நிலை, சூழ்நிலை எல்லாமே நல்லா இருக்கணும்.”

 “புரியல அக்கா இன்னும் கொஞ்சம் விவரமா எளிமையா சொல்லுங்க”

“சரி! சொல்றேன், சூழ்நிலைன்னா நீ படிக்கிற இடம் சுத்தமா இருக்கணும், நோட்டு, பேனா, புக் எல்லாம் எடுத்துட்டு படிக்க  உக்காரனும், ஒரு வாட்டர் பாட்டிலையும் பக்கத்துல வச்சுக்கோ, மூளைக்கு ஆக்ஸிஜன் பத்தாம கொட்டாவி வரும்போது தண்ணி குடிச்சா கொஞ்சம் சுறுசுறுப்பா ஆயிடலாம்”

“ம், சரி அக்கா”

“அப்புறம் தினமும் வாசிப்பு பழக்கத்தை தொடருவதும் நாம வேகமா படிக்க உதவி புரியும் டா. இயல்பா ஒரு நிமிடத்துக்கு 100 வார்த்தை வாசிக்க முடிஞ்சா தினமும் புத்தகம் வாசிக்கிறவங்களால இன்னும் அதிகமான வார்த்தைகள் வாசிக்க முடியும். அப்போ சிக்கிரமா படிக்கிறதும் படிக்கிறது எளிதா நம்ம நினைவடுக்குள தங்குவதற்கும் வசதியா இருக்கும்.”

“ஓ சூப்பர் அக்கா, எனக்கும் பாட புத்தகங்கள் தவிர மத்த புத்தகங்கள் படிக்க பிடிக்கும். இனிமேல் தினமும் வாசிக்கிறேன்”.

“அப்புறம் படிக்கும்போது ஒரு அரை மணி நேரத்துக்கு ஒருமுறையோ இல்ல உனக்கு எப்போ சோர்வாகுதோ அப்போ எழுந்து கொஞ்சம் நடக்குறது, ஒரு பாட்டு கேக்குறது இந்த மாதிரி அப்பப்போ எதாவது செஞ்சு புத்துணர்ச்சி ஆக்கிக்கணும்”

“கண்டிப்பா அக்கா, சில நாட்கள் விளையாடிட்டு படிக்கும்போது சிக்கிரம் படிக்கிறத நானும் உணர்ந்துருக்கேன்”.

“எனக்கும் ஒரு டிப்ஸ் தோணுது சொல்லவா அக்கா?”

“சொல்லுடா”

“போன முறை நான் ஸ்கூல்ல கொடுத்த வீடியோ பார்த்துட்டு, அப்புறம் புக்ல  படிச்சேன், இரண்டையும் சேர்த்து எழுதும்போது நிறைய எழுதுன மாதிரி இருந்தது, நல்லா மார்க்கும் வந்தது”

“ஆமாடா, சில பாடங்களை நிறைய வழிகளில் படிக்கும்போது நமக்கு நிறைய கருத்துக்கள் கிடைக்கும். அதுவும் ஒரு நல்ல வழி, ஒரே தலைப்புக்கு இரண்டு மூன்று புத்தகங்கள் படித்து குறிப்பு எழுதி படிப்பதும் நமக்கு நல்லா புரிந்து கொள்ள உதவும்.”

“அப்புறம் முக்கியமான விஷயம், தேவையான அளவு தூக்கமும் நம்மளோட நீண்ட கால நினைவுக்கு உதவும். தேர்வுக்கு முன்னதாகவே தயாராக பழகி  தேர்வுக்கு முந்தின நாள் இரவு  தேவையான அளவு தூங்கினாள் அது நம்  நீண்ட கால நினைவுக்கு உதவும்.”

“அப்புறம் வானவில் வண்ணங்களின் வரிசையை விப்ஜியார் அப்படின்னு ஞாபகம் வச்சிப்போம். (VIBGYOR – Violet, Indigo, Blue, Green, Yellow, Orange, Red). இந்த  மாதிரி சில நிமோனிக் மெமோரி வடிவங்களும் ஞாபகத்தில் வைத்து கொள்ள உதவும்”.

“இந்த மாதிரி எளிதில் படிக்கும் குறிப்புகள் நம்ம வீட்டிலுள்ளவர்களிடமும், நண்பர்களிடமும், ஒவ்வொருத்தர் கிட்டையும் நிறைய இருக்கும், அத கேட்டுகிட்டு எல்லாத்தயும் முயற்சி செய்து பார்க்கலாம்.”

இப்போ கவலை மறந்து துள்ளலோடு படிக்க தயாரானாள் ரம்யா.  

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments