ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷா பராக். இவரது தந்தை ஓம் சிங், இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தந்தையைப் போலவே ராணுவத்தில் ஆர்வம் கொண்ட அபிலாஷா, இந்திய விமானப் படையில் கடந்த 2018-ம்ஆண்டு செப்டம்பர் மாதம் சேர்ந்தார்.
கேப்டன் பராக் சனாவரில் உள்ள லாரன்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவி ஆவார். 2016 ஆம் ஆண்டு டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் பி டெக் பட்டப்படிப்பை முடித்தார்.
2018 ஆம் ஆண்டில், அவர் சென்னையிலுள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் இருந்து இந்திய இராணுவத்தில் பணியமர்த்தப்பட்டார். கார்ப்ஸ் ஆஃப் ஆர்மி ஏர் டிஃபென்ஸ் உடனான அவரது இணைப்பின் போது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் ராணுவ விமானப் பாதுகாப்புக்கு வண்ணங்களை வழங்குவதற்கான கன்டிஜென்ட் கமாண்டர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராணுவ ஏர் டிஃபென்ஸ் யங் ஆபீசர்ஸ் படிப்பில் ‘ஏ’ கிரேடிங்கையும், ஏர் டிராஃபிக் மேனேஜ்மென்ட் மற்றும் ஏர் லாஸ் படிப்பில் 75.70 சதவீதமும் பெற்று, தனது முதல் முயற்சியிலேயே பதவி உயர்வு தேர்வான பார்ட் பியில் தேர்ச்சி பெற்றார்.
இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானி:
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள காம்பாட் ஆர்மி ஏவியேஷன் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றார். இதில் பயிற்சி பெற்ற 36 போர் விமானிகளுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சி மே 26ம் தேதி அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராணுவ ஏவியேஷன் டிஜி ஏ கே சூரி கலந்து கொண்டு பதக்கங்களை வழக்கினார். இந்த விழாவில் பதக்கம் வென்ற முதல் பெண் அதிகாரி அபிலாஷா பாரக்கும் அடங்குவார்.
உங்கள் வீட்டு சுட்டிகள் தமிழோடு வளர்ந்து விளையாட, ஒவ்வொரு மாதமும்,உங்களைத்தேடி – பூஞ்சிட்டு