டைனோசர்கள் நிறைய வாழ்ந்ததாம் அந்த ஊரில்.
பெரிய டைனோசரெல்லாம் உணவு தேடி போகுமாம். அப்பா, அம்மா டைனோசரெல்லாம் பெரிய டைனோசர்களுக்கு உதவி செய்யுமாம்
குட்டி டைனோசரெல்லாம் விளையாடிட்டு இருக்குமாம்.
டைனோசர் ஊருக்கு பக்கத்து ஊரில் ஒரு கார் வாழ்ந்து வந்ததாம்.
அந்த கார், எல்லாருக்கும் உதவி செய்யுமாம். நடக்க முடியாதவங்களை கூட்டிட்டுப் போய் அவங்க போக வேண்டிய இடத்தில் விடுமாம்.
ஆனா அதுக்கு காசு கூட வாங்காதாம்.
ஒரு நாள் அந்த ஊரில் பெரிய மழை பெய்ததாம். மழை பெய்ததால் கார் ரிப்பேர் ஆகிடுச்சாம்.
நடக்க முடியாதவங்களுக்கு உதவி செய்ய யாருமே இல்லையாம்.
கார் ரிப்பேர் ஆகியது குட்டி டைனோசருக்கெல்லாம் தெரிய வந்ததாம்.
பக்கத்து ஊரில் அவங்க நண்பர் கார் சரி செய்யறவர் இருந்தாராம்.
அதனால் டைனோசரெல்லாம் சேர்ந்து காரை எடுத்துட்டுக் கொண்டு மெக்கானிக்கைப் போய் பார்த்தாங்களாம்.
எல்லாருக்கும் உதவி செய்கிற கார் தானே இது? என்று மெக்கானிக் கேட்டாராம்.
“ஆம்” என்று சொன்னதாம் டைனோசர்.
மெக்கானிக் காரை சரி பண்ணினாராம். எல்லா இடத்திலும் எண்ணை விட்டாராம். பெட்ரோலும் போட்டுட்டாராம்.
ஆனால், எதற்குமே காசு வாங்கவே இல்லை.
கார் சரியானதும் எல்லாருக்கும் நன்றி சொல்லிட்டு மீண்டும் நடக்க முடியாதவங்களுக்கு உதவ சென்றுவிட்டதாம்