ஓரு பெரிய காடு. அந்த காட்டில் ஒரு கழுதைப்புலி வாழ்ந்தது.
கழுதைப்புலி க்கு புலியோடு சண்டையிட ஆசையாக இருந்தது.
ஒரு நாள் கழுதைப்புலி, புலியைப் பார்த்து
“ஏ புலி என்னோட சண்டைக்கு வரியா?உனக்கு தைரியம் இருக்கா” எனக் கேட்டது.
புலி சொன்னது “என்கிட்ட மோதாத. நீ தான் அழுவ பின்ன” என்றது.
“என்கிட்ட மோத உனக்கு பயம். அதான் இப்பிடி சொல்ற” என்றது கழுதைப் புலி.
“சொன்னா கேட்க மாட்ட, சரி வா சண்டை போடுவோம்” என்றது புலி.
போட்டிக்கான ஏற்பாடு நடந்தது. போட்டியை நடத்த சிங்கம் வந்தது.
காட்டு விலங்குகள் எல்லாம் கூடின.
பறவைகள் கூட கூட்டம் கூட்டமாக மரங்களில் வந்து அமர்ந்தன.
புலி தனது முன்னங்காலால் அடிக்க பாய்ந்தது.
அதைக் கண்ட கழுதைப்புலி திரும்பிப் பார்க்காமல் காட்டின் மறு பக்கம் வரை நிற்காமல் ஓடியது.
அதன் பின் அது யாரையும் சண்டைக்கு அழைப்பதே இல்லை.