வணக்கம் குழந்தைகளே,
இன்னைக்கு நாம கோலம் போட்டு பார்க்கலாமா?
இது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த கோலமாக இருந்தால், இதை எப்படி உங்கள் தம்பி தங்கைகளுக்கு சொல்லி கொடுக்கலாம் என்று முயற்சித்து பாருங்கள்.
கோலம் போடுவதற்கு முன்பு கோலம் வரைவதால் உள்ள நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
- உடலுக்கு நல்ல பயிற்சி
- படைப்பாற்றல் கொடுக்கும் உற்சாகம்
- கணிதம் கைவசப்படும் (புள்ளி எண்ணிக்கை) ஊடு புள்ளி, நேர் புள்ளி
- இடத்தின் அளவுக்கு ஏற்றவாறு புள்ளி அளவை மாற்றுவது (spacial thinking )
- ஞாபக சக்தி

இன்னும் நிறைய பலன்கள் இருக்கு. உங்களுக்கு தோன்றும் நன்மைகளை சொல்லுங்க செல்லங்களே,
வாங்க குட்டி கோலம் போடுவோம்.
- இரண்டு புள்ளி இரண்டு வரிசை படத்தில் காண்பித்தவாறு வைங்க.
- மேலிருந்து கீழாக ஒரு கொடு முதல் வரிசை புள்ளிகளில் பக்கத்தில் போடுங்க சிட்டுக்களே.
- பின்பு, கீழுள்ள புள்ளியை சுற்றி ஒரு வளைவு போடுங்க
- இடமிருந்து வலமாக ஒரு கிடைமட்ட கோடு போடுங்க
* இப்போ இந்த புள்ளியை சுத்தி ஒரு வளைவு போடுங்க - அப்படியே கீழிருந்து மேலாக ஒரு கொடு போடுங்க
* இப்போ இன்னொரு வளைவு - வலமிருந்து இடமாக ஒரு கோடு போட்டுக்கோங்க குட்டிஸ்
- இன்னும் ஒரு வளைவு போட்டா கோலம் போட்டு முடிச்சிட்டோம்.
இன்னும் சில கோலங்கள் நீங்களா முயன்று பாருங்கள் தங்கங்களே.
இசை சுரேஷ்