கடியோ கடி..

நபர் 1 : “ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் டிரைன் நிக்கறப்ப எல்லா லக்கேஜையும் எடுத்துகிட்டு டிரைன்ல இருந்து இறங்கி மறுபடியும் டிரைன்ல ஏறுறீங்களே? எந்த ஸ்டேஷன்ல இறங்கணும்னு தெரீலயா?”🤔

நபர் 2 : “இல்ல சார்! நா கடைசி ஸ்டேஷன்லதான் இறங்கணும்னு தெரியும்.. ஆனா என்ன தொடர்ச்சியா பயணம் செய்யக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்கார்! ஆதனால தான் இறங்கி இறங்கி ஏறுறேன்!” 😜

நபர் 1 : 😵‍💫😖


டாக்டர் : “நீங்க ஒரு நாளைக்கு எட்டு டம்ப்ளர் தண்ணி குடிக்கணும்! அப்பதான் உங்க உடம்பு நல்லா இருக்கும்!” 🙂

பேஷன்ட் : “ஐயோ! எட்டு டம்ப்ளரா? என்னால முடியாதே!” 😢😔

டாக்டர் : “ஏன்?” 😕

பேஷன்ட் : “எங்க வீட்ல மூணு டம்ப்ளர்தானே இருக்கு.. எட்டு டம்ப்ளர்க்கு நா என்ன செய்வேன்?” 😜🤪

டாக்டர் : 🥴😵‍💫😖


கல்யாணத்தில ஏன் வாழை மரம் கட்டறாங்க? 😊

ஏன்?🤔

கட்டலன்னா வாழை மரம் கீழ விழுந்துடும்ல?!?! 😜🤪

🥴😵‍💫😖


ரெண்டு சிங்கம் இருந்துச்சாம். 🦁🦁

ஒரு சிங்கம் 🦁 போய் லைட் பட்டனை போட்டுச்சாம் ஆனால் லைட்💡 எரியலையாம். இன்னொரு சிங்கம் போட்டதும் லைட் எரிஞ்சுதாம். எப்படி??? 🤔

ஏன்னா அது ஆண் சிங்கமாம்.. லைட் ஆன் ஆயிடுச்சு. 🤭😜🤪

🥴😵‍💫😖


இரண்டு புலிகள் நடந்து போச்சாம். ஒரு புலி ஹீல்ஸ் போட்டிருந்தாச்சாம். ஏன் சொல்லு? 🤭

ஏன்? 🤔

ஏன்னா அது பெண் புலி! 🤪


ரெண்டு முயல் ம்யூசியம் போச்சாம்.. ஒன்னு மட்டும் பேர் எழுதிச்சாம் இன்னொன்னால எழுத முடியலையாம்.. ஏன்? 😁

ஏன்? 🤔

அந்த முயல் கிட்ட pen இல்ல. அது ஆண் முயல். 😜


பேரன்: எதை அடிச்சா எல்லாரும் சிரிப்பாங்க? 😄

தாத்தா: தெரியலையே? 😢🥴

பேரன்: ஜோக் அடிச்சா! 😆😜


ஒரு புலியும் ஒரு சிங்கமும் ரெஸ்டாரன்ட் போச்சாம். சிங்கம் புல்மீல்ஸ் சாப்பிட்டுச்சாம். புலி வேணாம்னு சொல்லிடுச்சாம். வொய்? 😁

வொய்? 🤔

பிகாஸ்.. புலி பசிச்சாலும் புல் திங்காதுல்ல.. 😜🤣💪


ஒரு குரங்கு மலை மேல இருந்து கீழே குதிச்சிடுச்சாம். ஆனால் அடியே படலை.. எப்படி? 😁

எப்படி? 🤔

ஏன்னா அது கண்டது கனவாம். 😜🤣


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *