பொட்டேடோ சீஸ் பால்

ஹாய் சுட்டீஸ்! உருளைக்கிழங்கு, சீஸ் பிடிக்காத குட்டீேஸ கிடையாது. இன்னிக்கு அது ரெண்டையும் சேர்த்து பொட்டேடோ சீஸ் பால் செய்யலாமா?

தேவையான பொருட்கள்:

50 கிராம் – நறுக்கிய சீஸ்
4 – வேகவைத்த உருளைக்கிழங்கு
2 மேஜைக்கரண்டி- துருவிய சீஸ்
1/2 மேஜைக்கரண்டி – மிளகாய் தூள்
சிறிதளவு- கொத்தமல்லி இலை
தேவையான அளவு – உப்பு

செய்முறை:

சீஸை குட்டி குட்டி துண்டுகளாக நறுக்கி வச்சுக்கலாம். உருைளக்கிழங்கையும் வேக வைத்து தோலுரித்து வச்சுக்கலாம். அப்றம் உருைளக்கிழங்கை மசித்து அதுகூட கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து வச்சுக்கலாம். கலந்த கலவையை தட்டையாகத் தட்டி அதுக்குள்ள சீஸ் கட்டியை வைத்து உருண்டையாக உருட்டனும். பிறகு பாத்திரத்தில் மைதா மாவு சேர்த்து தண்ணர் விட்டு கரைத்து வச்சிக்கலாம். உருட்டிய உருண்டைய அதில் போட்டு எடுத்துக் கொள்ளவும். தயாரா எடுத்து வச்ச பிரட் க்ரம்ஸ்ல மைதா மாவில் முக்கி எடுத்த உருண்டைய சேர்த்து நன்றாக உருட்டவும். எல்லா மாவையும் இதே போல் தயார் செய்து வச்சுக்கலாம். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளாக சேர்த்து பொன்னிறமா வர வரைக்கும் நிதானமா பொரித்து எடுக்கவும். தீயின் அளவை மிதமாக வைத்துக் கொள்ளவும். இதோ தயார் ஆகிட்டு குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரை எல்லாருக்கும் பிடிச்ச உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்.

சுட்டீஸ் எல்லாரும் அம்மா அப்பா கூட சேர்ந்து ரெடி பண்ணி பாத்துட்டு சொல்லுங்க.

– பத்மாசினி மாதவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *