நூல்: எறும்பும் புறாவும்

ஆசிரியர்: லியோ டால்ஸ்டாய்
பக்கம் : 158
71/50+
தமிழில் பியாரி செரீபு சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். குழந்தைகளுக்கான கதைகள் என்றவுடனே வார்த்தைகள் கொஞ்சமாகவும், ஒவ்வொரு கதைக்கும் படங்கள் பெரிதாகவும் உள்ளது சிறப்பு. படிக்கும்போதே குழந்தைகள் படங்கள் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. அது ரசிக்கவும் முடிகிறது! ஓவியங்கள் மி.ரமாதின் அருமையாக வரைந்திருக்கிறார். வெளியீடு நீலவால்குருவி பதிப்பகம். இதன் விலை ₹170. நமக்கு மிகவும் பிரபலமான கதைகள் இவருடையது என்பது வியப்பு அளித்தது. அதில் முயலும்,ஆமையும் கதை மற்றும் காட்டில் இரு நண்பர்கள் போகும்போது கரடி வரும். ஒருவன் மரத்தில் ஏறி ஓடி ஒளிந்து கொள்வான் அந்தக் கதையும் இருந்தது. யார் எழுதியது என்று தெரியாமலே பள்ளியில் புத்தகத்தில் இப்பவும் இருக்கிறது இக்கதைகள். இந்தக் கதைகள் குழந்தைகள் படித்தால் அவர்களுக்கானது என்றும் பெரியவர்கள் படித்தால் அவர்களின் புரிதல் வேறு மாதிரியும் இருக்கிறது. பெரிய விஷயங்களை எளிய கதைகளாக உலாவ விட்டிருக்கிறார். சமீபத்தில் அரசியல் மேடைகளில் பேசும் நபர்களின் தோலைக் கூட உரித்துக் காட்டியிருப்பதாக எனக்குப் பட்டது.பருந்தும் புறாவும் கதை படித்தவுடன் அப்படித் தோன்றியது. பேச்சைக் கண்டு ஏமாறுவது அதில் ஒன்று. சமயோசிதம், புத்திக் கூர்மை, இடம்,பொருள் பார்த்து பழகுவது என்று ஒவ்வொன்றும் முத்து முத்தான அறிவுரைகள்! குழந்தைகளுக்கு அவசியம் வாங்கிக் கொடுக்க வேண்டிய புத்தகம்.
