🙂 பங்களூரு போகணும்🙂
அப்பா அம்மா
இங்கே வாங்க!
என்னைக் கட்டி
முத்தம் தாங்க!
படிப்பில் நானே முதல்.
விளையாட்டிலும் அப்படியே.
பாட்டில் நான் குயிலு.
பண்பில் நான் உம் போல.
கணக்கில் புலி.
தமிழில் சிங்கம்.
ஹிந்தியும் ஆங்கிலமும்
எளிதே எனக்கு.
சரித்திரம் எனக்கு சுளுவு
பூகோளம் அது சுலபம்.
சமர்த்து பையன் நான்
பரிசு ஒன்று வேண்டும்.
கூகூ ரயில் ஏறி
பங்களூரு போகணும்.
பாட்டி பார்க்க போகணும்
அவள் மடியில்
படுத்து உறங்கணும்.
தாத்தா விரல் பிடித்து
அத்தை வீடு போகணும்.
பட்டம் பலூன் பஞ்சு மிட்டாய்
வாங்கி நான் திங்கணும்

மஞ்சள் பச்சை நீலத்தில்
சட்டை பேன்ட்
கண்டிப்பாக வாங்கணும்.
அப்பா அம்மா வாங்க!
வெரசா ஓடி வாங்க!
– சசிகலா விஸ்வநாதன்
