நூல்: நிறங்கள்

ஆசிரியர்: பஞ்சு மிட்டாய் பிரபு

பக்கம்: 87

நிறங்கள் என்பவை இயற்கையின் அதிசயம் மட்டுமல்ல, அவை மனிதர்களுக்கு இயற்கை அளித்த மிகப் பெரிய பரிசு. ஏனென்றால், மனிதர்களும் இன்னும் சில உயிரினங்களும் நிறங்களைக் காணும் ஆற்றலை, தங்கள் பரிணாம வளர்ச்சியில்தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

நிறங்களின் அறிவியலை அறிந்துகொள்ள அறிஞர்கள், அறிவியலாளர்கள், தத்துவஞானிகள், ஓவியர்கள் என எண்ணற்றவர்கள் பங்காற்றியுள்ளனர். 1,00,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்ஸிடம் தொடங்கிய நம் பயணம், 1800வரை வந்துள்ளது. அவர்களில், அரிஸ்டாட்டில், அல் ஹசன் அல்ஹெய்தம், நியூட்டன், தாமஸ் யங், கூதெ என நிறங்கள் குறித்து மிக முக்கியமான கோட்பாடுகளை வழங்கியவர்களைப் பற்றி இப்புத்தகத்தில் உள்ளது.

நிறங்கள் பற்றிய இந்நூல் குழந்தைகளுக்கு புரியும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. வானவில்லில் பிங்க் ஏன் இல்லை என்ற என் மகளின் கேள்விக்கு இந்நூலில் பதில் உள்ளது. முதன்மையான நிறங்கள் என்னென்ன? கூட்டு வண்ணக் கலவை என்றால் என்ன? கழித்தல் வண்ணக் கலவை என்றால் என்ன? என்கிற கேள்விகளுக்கும் பதில் உள்ளது.

தமிழும் நிறமும் என்ற குறிப்புகளும் அருமை. சங்ககாலம் தொட்டே நிறங்கள் பற்றிய சொல்லாடல் இருக்கிறது என்று கூறுகிறார். இந்நூலின் அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

– ஜெயா சிங்காரவேலு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *