இந்த மாதம் நாம் பார்க்கப்போகும் பறவை ஒரு வாத்து வகையாகும். வாத்துகளின் வடிவமைப்பை பார்த்தாலே நாம் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். “குள்ள குள்ள வாத்து”…. என்று நாம் பள்ளியில் படித்தது போல் இவை குட்டை கால்களுடன் சற்றே பெரிய உடலமைப்புடன் நீண்ட அலகோடு காணப்படும். நீந்துவதற்கு ஏற்ப இதன் கால்களில் விரல்களின் இடையே காணப்படும் ஜவ்வு போன்ற அமைப்பு தடுப்பு போல செயல் படும். வாத்துகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று நீரின் மேற்பரப்பில் உள்ள உணவை உட்கொள்ளும் ‘dabbling ducks’ எனப்படுபவை; மற்றொன்று நீரில் மூழ்கி உணவை உட்கொள்ளும் ‘ diving ducks’ என்பவை.

spot duck

இந்த முறை நாம் பார்க்கப் போகும் பறவை Indian spot billed duck எனப்படும் புள்ளி மூக்கு வாத்து. இதன் அறிவியல் பெயர் Anas poecilorhyncha.

ஏறக்குறைய ஒரு அடி நீளத்தில் இருக்கும் இந்த வாத்தின் உடல் அடர் பழுப்பு நிறத்திலும் கழுத்து மற்றும் தலை வெளிர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். அலகுகள் கருப்பாக இருக்கும்;முன்பகுதியில் மஞ்சள் திட்டுகள் காணப்படும். அலகின் அடிப்பகுதியில் சிவப்பு புள்ளி இருக்கும். இந்த சிவப்பு புள்ளி தான் இந்த வார்த்தையின் பெயர் காரணம் கூட. இவை பறக்கும்போது அதன் இறக்கைகளில் அடர் பச்சை நிற இறகுகள் ஒரு பட்டை போல் காணப்படும். கால்களும் பாதங்களும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். ஆண் பெண் பறவைகள் இடையே பெரிய வித்தியாசம் இருக்காது. ஆனால் பெண் பறவையின் அலகின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சிவப்பு புள்ளி சிறிதாக இருக்கும் அல்லது சில சமயங்களில் இல்லாமலும் இருக்கும்.

spot duck 2

இந்திய துணை கண்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நீர்நிலை சார்ந்த இடங்களில் இந்த வார்த்தைகளை பார்க்க முடியும். சிறு குழுக்களாக காணப்படும் இந்த வாத்துகள் பெரும்பாலும் இருப்பிட பறவைகளாகவே இருக்கும். தென்னிந்தியாவில் காணப்படும் வாத்துகள் நவம்பர் டிசம்பரில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். பெரும்பாலும் செடி கொடிகளுக்கு இடையே தரையிலும் சில சமயங்களில் மரக் கிளைகளிலும் கூடுகட்டும். 8 முதல் 14 முட்டைகள் வரை இடும். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த வார்த்தைகள் சில சமயங்களில் மாமிசத்திற்கு ஆக வேட்டையாட படுவதும் உண்டு. அடுத்த முறை பக்கத்தில் உள்ள குளம் குட்டைகளில் இந்த வார்த்தைகளை கண்டால் நீங்கள் அடையாளம் கண்டு கொள்வீர்கள் தானே?. இவற்றைப் பாதுகாப்பது நமது கடமை ஆகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments