ஒரு நாள் நிலா சூரியனை பிடிச்சு அடச்சி வச்சிருச்சாம்.
அதனால் உலகமே தலைகீழா மாறிடுச்சாம்.
பகல்ல இருட்டா இருக்குமாம்.
இரவுல வெளிச்சமா இருக்குமாம்.
நிலா தினமும் வந்துட்டே இருந்ததாம்.
அதனால் உலகத்துல எல்லா உயிரினத்துக்கும் தூக்கமா வந்ததாம்.
பகல்ல எல்லாம் தூங்கிட்டே இருந்ததாம். இரவிலும் முழுக்க தூக்கமா வந்ததாம்.
ஒரு செடிலயும் பூவே பூக்கலையாம். செடியும் தூங்கிடுச்சாம்.
அதனால எந்த விலங்கும் சாப்பிடலையாம். விலங்குகளுக்கும் தூக்கமா வந்ததாம்.
நிலாக்கும் தூக்கமா வந்துடுச்சாம்.
அதனால் நிலா சூரியனை விடுவிச்சிட்டு தூங்கிடுச்சாம். சூரியன் வந்ததும் வெளிச்சமாகிடுச்சாம்.
எல்லா உயிர்களுக்கும் தூக்கம் போய்டுச்சாம்.
அந்த உலகமே பூ வா மலர்ந்துடுச்சாம்.
அப்றமா பகல்ல வெளிச்சமா இரவுல இருட்டா ஆகிடுச்சாம்.
அப்றம், நிலா சூரியன் கூட நட்பாகிடுச்சாம்.