தொகுப்பாளர் 1: ஒரு கிராமத்தில் சிறிய பள்ளி இருந்தது. அங்கு நிறைய மாணவர்கள் இருந்தனர். அங்கு ஒரு புது மாணவி வந்தாள். அவளுக்கு படிப்பில் நோக்கம் இல்லை. ஒரு நாள் அவள் குரு பாடம் நடத்தும் போது அவளுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அதை குருவிடம் கேட்டாள்.
மாணவி லக்ஷ்மி: குரு எனக்கு ஒரு சந்தேகம்
குரு: அப்படியா? என்னவென்று சொல்?
லக்ஷ்மி: நமக்கு ஏன் கல்வி தேவை? அதை வைத்து என்ன செய்வோம்?
குரு: ஹா ஹா ஹா….. இந்தக் கேள்வி எதற்கு உனக்கு? சிறிது நேரம் கழித்து விடை சொல்கிறேன். இப்போது அமரு.
தொகுப்பாளர் 2: அவளும் அமர்ந்தாள். சிறிது நேரம் கழித்து அவளின் நண்பர்கள் அவளிடம் வந்து ஒவ்வொருவராக அவளிடம் கூறினார்கள்.
ராம்: உனக்கு சாப்பாடு வேணுமா லட்சுமி?
லட்சுமி: ஆமாம் வேண்டும் ராம்.
ராம்: அப்போது கல்வி வேண்டும். இப்போது புரிகிறதா லட்சுமி?
லட்சுமி: புரியவில்லையே ராம்…
மீனா: லட்சுமி அதாவது உனக்கு வாழ்க்கையில் சாதிக்கணும் என்றால் கல்வி அவசியம்.. புரிந்ததா லட்சுமி?
லட்சுமி: இல்லையே புரியவில்லை மீனா..
தொகுப்பாளர் 1: எப்படி சொல்லியும் அவளுக்கு புரியவில்லை. அப்போது குரு வந்தார்.
குரு: என்ன நடக்கிறது இங்கே?
க்ரிஷ்: குருவே நீங்கள் பாடம் எடுக்கும் போது லட்சுமி ஒரு கேள்வி கேட்டாள் அல்லவா? அதற்கான விடை தருகிறோம். ஆனால் அவளுக்கு புரியவில்லை.
குரு: ஹா ஹா… அப்படியா வர்ஷன் எங்கே?
வர்ஷன்: குரு கூப்பிட்டீர்களா?
குரு: ஆமாம் நீ, லட்சுமி, கிருஷ், ராம், மீனா அனைவரும் என் அறைக்கு வாருங்கள்.
மாணவர்கள்: ஆம் குரு வருகிறோம்.
தொகுப்பாளர் 2: அவர்கள் எல்லாரும் குருவின் அறைக்கு சென்றார்கள். அங்கு சென்றவுடன் ஆச்சரியப்பட்டார்கள்.
வர்ஷன்: இங்கே பாருங்கள். அறை இருட்டாக இருக்கிறது.
ராம் மற்றும் க்ரிஷ்: அங்கு பார் குரு வருகிறார்.
குரு: லக்ஷ்மி நீ அந்த அறைக்குள் சென்று ஒரு புத்தகத்தை எடுத்து வரவும். செல் லட்சுமி..
தொகுப்பாளர் 1: லட்சுமி உள்ளே சென்றாள். அந்த அறை இருட்டாக இருந்தது. அவளால் பார்க்க முடியவில்லை. அவள் புத்தகம் இருந்த பகுதிக்கு சென்றவுடன் அங்கு ஒரு மாணவன் இருந்தான். அவன் பக்கத்தில் இருந்த கயிற்றை வைத்து லட்சுமியை பயமுறுத்தினான். லட்சுமி குடுகுடுவென்று ஓடி வந்தாள். அவள் ஓடிவந்து குருவிடம் கூறினாள்.
லக்ஷ்மி: குரு ஒரு பாம்பு என் காலை கடித்து விட்டது.
குரு: அப்படியா லட்சுமி. பரவாயில்லை.
நீ இந்த விளக்கை இப்போது எடுத்துச் செல்.
லக்ஷ்மி:. சரிங்க குரு.
தொகுப்பாளர் 2: லட்சுமி உள்ளே விளக்குடன் சென்றாள். அப்போது அங்கு ஒரு மாணவனை பார்த்தாள். அவனிடம்
லட்சுமி: உன் பெயர் என்ன?
மாணவன்: என் பெயர் லட்சுமணன்.
லட்சுமி: நீ தான் என்னை பயமுறுத்தினாயா?
லட்சுமணன்: நான்தான் உன்னை பயமுறுத்தினேன். புரிந்ததா லட்சுமி..?
லட்சுமி: புரியவில்லையே லட்சுமணன்..
லட்சுமணன்: அதாவது நீ இருட்டில் வரும்போது பயந்தாய் அல்லவா.. வெளிச்சத்தில் பயப்படவில்லை.. அதேபோல் கல்விக்கு உன் வாழ்க்கையில் மதிப்பு கொடுத்தால் கல்வி உன் வாழ்க்கையே வெளிச்சம் ஆக்கிவிடும் லட்சுமி.
லக்ஷ்மி: இப்போது புரிந்தது லட்சுமணன். நன்றி.
தொகுப்பாளர் 1: இப்போது லட்சுமிக்கு புரிந்தது. கல்வி அவசியம் என்பதை நீங்களும் புரிந்து கொண்டீர்கள்.
கல்வியே செல்வம்… கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு… கற்றது கையளவு கல்லாதது உலகளவு… திருவள்ளுவரும் திருக்குறளில் கல்வி என்ற அதிகாரத்தில் கல்வியின் சிறப்புகளை தெளிவாக கூறியுள்ளார்.
கனிஷ்கா ஈரோட்டில் உள்ள CS Academy பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார்