பதிப்பாசிரியர்கள்
வித்யா செல்வம்
தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த நாள்முதல் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என் உற்ற துணையாய் இருப்பது புத்தகங்களே.. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்தில் விழுந்த வித்துதான் இந்த மின்னிதழ். இது தளிராய் வளர்ந்து விருட்சமாய் மாறி, நம்தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.
ஞா.கலையரசி
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.
Dr. S. அகிலாண்டபாரதி
குழந்தைகள் மத்தியில் இருப்பது எப்போதும் பிடிக்கும். ‘கதை சொல்லு கதை கேளு’ என்ற பெயரில் குழு ஒன்றை நடத்தி வருகிறேன். நாவல்கள், சிறுகதைகள், மருத்துவக் கட்டுரைகள் சில வருடங்களாக எழுதி வருகிறேன்.
குழு ஒருங்கிணைப்பாளர்
சுசி கிருஷ்ணமூர்த்தி
இந்திய பொதுத்துறை நிருவனத்தில் தலைமை மேலாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவள். தற்போது கோவையில் வசிக்கிறேன். பல பத்திரிகை களில் கதைகள்/கட்டுரைகள் எழுதி 3 சவரன் தங்கம், லேப்டாப் என பல பரிசுகள் வாங்கி இருக்கிறேன். இன்னும் எழுதி கொண்டிருக்கிறேன்.
ஓவியம்
அப்பு சிவா
காமிக்ஸ்..இலக்கியங்களை படிக்க ஆர்வம். தற்போது கதைகளும் எழுதிவருகிறேன். ஓவிய ஆர்வமுண்டு. மூன்று குழந்தை புத்தகங்கள் உட்பட ஆறு புத்தகங்கள் kindle ல் வெளியாகியுள்ளது. தற்போது குழந்தைகள் நாவல் ஒன்று எழுதி வருகிறேன்.
ஆசிரியர்கள்
ராஜலட்சுமி நாராயணசாமி
பொறியியல் பட்டதாரி, தற்சமயம் இல்லத்தரசி; இரு சிறார்களின் தாய்; இரண்டு அச்சு புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன. என்னைச் சுற்றி நிகழும் சமூக நிகழ்வுகள் கதைகளாக உருப்பெருகின்றன. தொடர்ந்து வாசித்து எழுதி, என்னை நானே மேம்படுத்த முயன்று கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர் நான்.
ஜெயா சிங்காரவேலு
நான் கரூரில் இருக்கிறேன்.இரண்டு வருடமாக தளங்களில் எழுதி வருகிறேன்.கணிதம்,சிறப்புக்கல்வி படித்துள்ளேன்.
புவனா சந்திரசேகரன்
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.
பி. தமிழ்முகில்
பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். தற்சமயம் மணமாகி, கடந்த பத்து ஆண்டுகளாக வசிப்பது அமெரிக்கா. கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு”. பள்ளி நாட்களில் தொடங்கிய கவிதை வாசிக்கும் ஆர்வம், கொஞ்சம் கொஞ்சமாக ஆசிரியர்கள், நண்பர்களின் தூண்டுதலோடு வளர்ந்து வருகிறது. வாசிக்க பிடித்திருந்தபடியால், எழுதிப் பார்க்க ஒரு ஆவலுடன் துவங்கிய எழுத்துப் பயணம், இன்று கதை, கவிதை, கட்டுரை என்று தொடர்ந்து வருகிறது.
பூர்ணிமா கார்த்திக் ’பூகா’
மருத்துவம் சார்ந்த துறையில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்துள்ளேன். ஒரு மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறேன்.கடந்த இரண்டு வருடங்களாக சிறுகதைகள் மற்றும் புதினங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். யூ ட்யூப்பில் ஒலி வடிவ கதைக்களுக்கான சானல் ஒன்றையும் நடத்திக் கொண்டு வருகிறேன்.
தேவிபிரபா
வாசிப்பை நேசிக்கும் வாசகி. அவ்வப்பொழுது எழுதுவேன். பயணங்களும், பாடல்களும் – பிடித்தமானவை
S.நித்யலக்ஷ்மி
கும்பகோணத்தில் வசிக்கிறேன். M.E Computer Science முடித்து விட்ட இல்லத்தரசி நான். எனக்கு கோலம், ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. மேலும் கைவினைப் பொருட்களும் செய்து வருகிறேன்.. 2012 முதல் பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறேன்
பத்மாசினி மாதவன்
பிரதிலிபி தளத்தில் சிறுகதைகள் , குறுநாவல் எழுதிக்கொண்டு இருக்கிறேன். தமிழ் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன்.
அன்னபூரணி தண்டபாணி
நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.
கவிசௌமி
நான் ராஜேஸ்வரி.d (கவிசெளமி),கோவையில் வசிக்கிறேன். இரண்டு வருடமாக கதைகள் எழுதுகிறேன். புதினம்2020 போட்டியில் மூன்றாவது பரிசு வாங்கி புத்தகமாக வெளிவந்தது மறக்கமுடியாத அனுபவம்
பிருந்தா ரமணி
மதுரையில் இருக்கிறேன். M. A., M. P hil., முடித்திருக்கிறேன். நான் கடந்த 28 வருடங்களுக்கும் மேலாகப் பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். 30 வகை சமையல் இணைப்புப் புத்தகமாக மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி, அவள் விகடன், தேவதை (இப்போது வருவதில்லை)… போன்ற பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இப்போது தான் கதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறேன். YouTube ஒன்றிலும் போட்டு வருகிறேன்.