கீச் கீச் கீச்!

பூஞ்சிட்டு வந்திருக்கேன்!  ஓடி வாங்க செல்லங்களே!

உங்களுக்கு ஒரு நல்ல சேதி, சொல்லப் போறேன்! சீக்கிரம் ஓடி வாங்க!

மூனு மாசத்துக்கு மேல, கொரோனாவால வெளியில போகமுடியாம வீட்டுலேயே அடைபட்டுக் கிடக்கிறீங்க தானே?  டிவி, கார்ட்டூன் பார்த்துப் பார்த்துப் போரடிச்சிப் போயிடுச்சி தானே? உங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியான ஒரு சேதி!

அது என்னன்னா, சின்னப் பசங்களுக்குக் கதை எழுதறவங்க எல்லாரும் சேர்ந்து, என் பேர்ல, ஒரு மாத இதழ் கொண்டு வந்திருக்காங்க!

அதனால எங்களுக்கு என்ன பயன்?;

இது சின்னப் பசங்களுக்கான இதழ்! இதுல உங்களுக்குப் புதுசு புதுசா நெறையாக் கதைகள் இருக்கு; வாசிக்கறதுக்கு சூப்பராயிருக்கும்; அது மட்டுமில்ல;

புதிர்காடுன்னு ஒரு பகுதியிருக்கு.  அதுல நெறையா வார்த்தை விளையாட்டு இருக்கு;  அதையெல்லாம் நீங்க கண்டுபிடிக்க ஆரம்பிச்சா, நேரம் போறதே தெரியாது.  ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்.

ஜிகினா பக்கம்னு இருக்குற பகுதியில, தினுசு தினுசாக் கலைபொருட்கள் எப்படி செய்யறதுன்னு, ஐடியா கொடுத்திருக்காங்க; செஞ்சு பாருங்களேன்;

இதை வாசிக்கிறதுனால, உங்கப் பொது அறிவும் வளரும்; பொழுதும் நல்லாப் போகும். அறிவியலும் தெரிஞ்சிக்கலாம்; அறிஞர்களைப் பத்தியும் தெரிஞ்சிக்கலாம்! பலசாலி ஆகலாம்! பகுத்தறிவு பெறலாம்!

உங்க திறமைகளை உலகறியச் செய்ய வாய்ப்புகளும் இங்கே இருக்கு.. மாதாமாதம் நடக்கும் பரிசுப் போட்டிகள்ல நீங்க கலந்துகிட்டு பரிசுகளை அள்ளிச் செல்லலாம். உங்க படைப்புகளை எங்கள் மேடையில் ஏற்றி, அழகு பார்க்கலாம்.

குட்டிக் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களே.. உங்கள் பிள்ளைகளின் நேரத்தை எப்படி பயனுள்ளதா, சுவாரஸ்யமா செலவழிப்பதுன்னு யோசிச்சி களைத்துப் போயிருக்கீங்களா? உங்களுக்காக பூஞ்சிட்டு இதழின் படைப்புகளை ஒலிவடிவத்திலும் பதிவிடுகிறோம். அந்தந்த பகுதிகளில் உள்ள ஒலி வடிவத்திற்கான சுட்டியைச் சுட்டி, உங்க குழந்தைகளோடு நீங்களும் எங்கள் பூஞ்சிட்டு உலகத்தில் கவலையின்றி உலா வரலாம்.

சரி.  இதை ஏன் ஜூலை 15 ஆம் தேதி ஆரம்பிக்கிறீங்க?  அந்தத் தேதியில, என்ன விசேஷம்? 

கல்வித் தந்தை காமராஜரு பொறந்த தினம்னு, நீங்க யூகிச்சது சரி. அவரோட முயற்சியாலத தான், எல்லா ஊர்லேயும் பள்ளிக்கூடம் திறந்தாங்க..  எல்லோரும் படிக்கனும்னு கனவு கண்டவர் பிறந்த நாள்ல நீங்க எல்லோரும் இந்த மின்னிதழைப் படிக்க ஆரம்பிக்கனும்னுதான் ஜூலை 15, அன்று இதை வெளியிடுறோம்.

நான் சொன்னது கொஞ்சம்தான்..இந்த இதழ் முழுக்க உங்களுக்குப் பிடித்த, ஆர்வம் மூட்டக்கூடிய பல பகுதிகள் இருக்கின்றன. படிச்சிப் பார்த்து, உங்களுக்கு என்ன தோணுதோ, அதை எனக்கு மறக்காம எழுதியனுப்புங்க. 

அடுத்த மாதம் சந்திக்கலாம்!

கீச் கீச் கீச்!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
6 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments