ஹாய் பூஞ்சிட்டுக்களே! நீங்கல்லாம் வீட்ல கண்ணாடியால் ஆன பாத்திரங்கள் வச்சிருக்கீங்களா? கண்ணாடியால் செய்யப்பட்ட பொம்மைகள், அழகுப் பொருட்கள் வச்சிருக்கீங்களா?

அதெல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்குல்ல? அதையெல்லாம் எப்படிக் கையாளணும்? ரொம்ப கவனமா இருக்கணும் இல்லையா?

 அதே மாதிரி தான் நம்ம உடம்பும். ஆரோக்கியமா இருக்கிற வரைக்கும் ரொம்ப நல்லா இருக்கும். சின்ன பிரச்சனை வந்தால் கூட உடைஞ்சு போக வாய்ப்பு இருக்கு. அதனால எப்பவுமே ஆரோக்கியத்தைக் காப்பாத்திக்கனும். அதுக்கு என்னல்லாம் பண்ணலாம்? பொதுவாவே நல்லா இருக்கும் போது நாம கண்டுக்காத உறுப்பு ஒன்னு இருக்கு.. அது நம்ம பற்கள்.

teeth

ஒரு விளம்பரம் ஒன்னு வந்திருக்கு பார்த்தீங்களா? ‘வாய்தான் கிருமிகளுக்கு என்ட்ரி பாயின்ட்’ அப்படின்னு.. அது உண்மைதான். நமக்கு அம்மா, அப்பா எல்லாம் அடிக்கடி சாக்லேட் வாங்கி தராங்கல்ல? அப்ப பல்லுல இனிப்புத் துகள்கள் ஒட்டிக்கும். அதில் கிருமிகள் நிறைய வளர வாய்ப்பிருக்கு. அதனால என்ன சாப்பிட்டாலும் உடனே வாய் கொப்பளித்து விடணும். தினமும் ரெண்டு தடவை பல் துலக்கச் சொல்லி எல்லாரும் அறிவுறுத்துறாங்க. ஆனா நாம முறையா பல் துலக்குறோமா? அவசர அவசரமா பல் துலக்குறதால பல்லுக்கு நடுவுல சிறுசிறு அழுக்குகள் தேங்கி நிற்கும். அது பின்னாடி பல்சொத்தையை ஏற்படுத்தும். 

ஒரு பல்லில் சொத்தை வந்துச்சுன்னா பின்னாடி நல்ல பல்லையும் பாதிக்கும்.  பற்கள் முன்பின்னாக வளரும். அப்படி வளர்ந்து சில குழந்தைகள் ‘க்ளிப்’ போடுறதப் பார்த்திருப்பீங்களே?  பற்கள் முன் பின்னாக வளர்ந்திருந்தால், உணவை நல்லா சுவைத்து விழுங்க முடியாது. தூங்கும்போதும் வாயைத் திறந்து வச்சுகிட்டுத் தூங்குவோம். அப்போ ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது. அதனால மறு நாள் ரொம்ப அசதியாக இருக்கும்‌.

 இதையெல்லாம் தடுக்குறதுக்கு என்ன வழி? பற்களை சுத்தமாக வச்சுக்கிறது.  அப்புறம் நாம பல்துலக்குற பிரஷ் நல்ல தரமுள்ளதா இருக்கணும். சிலருக்கு சாஃப்ட் ப்ரஷ் தேவைப்படும், சிலருக்கு ஹார்ட் பிரஷ் தேவைப்படும்.  நமக்கு எது பொருந்தும்னு பல் மருத்துவரிடம் கேட்டு முடிவு செஞ்சுக்கலாம். மேல் கீழாக பல்லைத் துலக்க வேண்டும். அதேமாதிரி நகத்தைக் கடிக்கிறது, பல்லால பேனா, பென்சில், கையில் கிடைக்கிற பொம்மைகளைக்  கடிக்கிறதை அறவே தடுக்கணும். கொஞ்சம் கஷ்டப்பட்டுப் பழகிட்டா எதை வேணாலும் சுலபமா வாழ்க்கை முழுமைக்கும் செய்யலாம். அது நமக்கு நல்லது தானே? செய்யலாமா பூஞ்சிட்டுக்களே!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments