1. நடந்தவன் நின்றான். கத்தியால் தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார் ? |
2. இருட்டில் சிதறும் சுடாத தீப்பொறி. அது என்ன? |
3. கறுப்பர்கள் ஆண்டு பல காலம் ஆனதும் வெள்ளையர் ஆதிக்கம் ஆரம்பம். அது என்ன? |
4. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது. அது என்ன? |
5. சீப்பு உண்டு, தலை வார முடியாது. பூ உண்டு, மாலை கட்ட உதவாது. அது என்ன? |
பதில்கள்:
- பென்சில்
- மின்மினிப் பூச்சி
- நரைமுடி
- கண்விழி
- வாழைமரம்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
கும்பகோணத்தில் வசிக்கிறேன். M.E Computer Science முடித்து விட்ட இல்லத்தரசி நான். எனக்கு கோலம், ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. மேலும் கைவினைப் பொருட்களும் செய்து வருகிறேன்.. 2012 முதல் பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறேன்.