குழந்தைகளே, உங்கள் கைச்சுவடுகளை அழகிய பறவை மற்றும் விலங்கு ஓவியங்களாக மாற்றுவோமா?
குழந்தைகளின் கைகளை வெள்ளைத் தாளின் மீது வைத்து, அதனை பேனா அல்லது பென்சில் கொண்டு சுவடு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் தேவையான கண், மூக்கு, வாய், கால், இறகுகள் என நாம் வரைய விரும்பும் பறவை/விலங்கின் அடையாளங்களை வரைந்து கொள்ளலாம்.
இம்முறையில், யானை, மயில், வான்கோழி, ஆமை, குருவி, கோழி, மீன், குதிரை, வரிக்குதிரை இன்னும் பல விலங்கு உருவங்கள் வரையலாம்.
இம்முறையில் வரைந்த சில பறவை, விலங்குகளைப் பார்த்து, நீங்களும் வரைந்து பாருங்களேன்.