அட்டப்பூச்சிகள் வேத காலத்தை சார்ந்தவை. இந்த பூச்சிகளை ஆங்கிலத்தில் lace winged insects என்று சொல்வார்கள். இந்த பூச்சிகளின் முன்புறம் மற்றும் பின்புறம், எண் எட்டு (நம்பர் 8) வடிவில் இறக்கைகள் இருக்கும். எட்டு எண் போன்ற இறக்கைகளை கொண்ட பூச்சிகள் என்பதால் இந்த பூச்சியை அட்ட பூச்சி என்று சொல்ல ஆரம்பித்தார்கள். (அஷ்டம் என்றால் எட்டு)
இந்தப் பூச்சிகளுக்கு ஒரு தனித்தன்மை உண்டு.
முட்டைகளை இடும்போது, வரிசையாக இட்டுக்கொண்டு செல்லும் தன்மையுடையது. அந்த வரிசையைப் பார்க்கும்போது, ஒரு டிசைன் மாதிரித் தோற்றமளிக்கும். அந்த அமைப்பை அடிப்படையாக வைத்து, பழங்காலங்களில் எதிர் காலத்தைக் கணித்தார்கள் ஜோதிடர்கள்.
இந்த முட்டை ஜோசியத்தை ஜப்பானிய மொழியில் டோங்கோ என்று கூறுவார்கள். பௌத்தர்களே இந்த அட்டப்பூச்சி ஜோசியம் மிகவும் பிரபலமாவதற்கு காரணகர்த்தாக்கள்.
—::: :::—