‘லொக் லொக்’ அருண் இருமும் சத்தம் சமையல் அறையில் இருந்த மாலாவுக்குக் கேட்டது. அவள் அங்கிருந்து படுக்கை அறைக்குப் போய்ப் பார்த்தாள்.அருண் எழுந்து படுக்கையில் உட்கார்ந்து இருமிக் கொண்டு இருந்தான்.

“அம்மா! தொண்டை எல்லாம் ரொம்ப வலிக்குது மா!”

“சரிடா கண்ணா! பக்கத்து வீட்டு லக்ஷ்மி பாட்டி கிட்டே கேட்கிறேன். அவங்க ஏதாவது வீட்டு வைத்தியம் சொல்லுவாங்க, சரியாயிடும், கவலைப்படாதே!

“சரிம்மா!”

பக்கத்து வீட்டு லக்ஷ்மி பாட்டியிடம் அருண் இருமலால் அவதிப்படுவதைச் சொன்னவுடன், 

“இதுக்கா கவலைப்படறே! இந்தா பாரு கொல்லைப்புறம் தூதுவளை செடி இருக்கு பாரு, அதுல 20 இலையைப் பறித்துக் கொண்டு வா!

அவளும் பறித்துக் கொண்டு வந்தாள்.

“இப்போ நான் சொல்றேன் அதை என்ன பண்ணனும்னு?”

தேவையானவை:

தூதுவளை இலைகள் – 15-20

மிளகாய் வற்றல் – 2

தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன்

கறுப்பு தோல் உ. பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

புளி – சிறு நெல்லிக்காய் அளவு

உப்பு – தேவையானது

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்துச் சூடானவுடன் எண்ணெய் விட்டு, ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டுத் திரித்து எடுத்தால் ஹெல்த்தியான தூதுவளை பொடி ரெடி.

thoodhuvalai

இதைச் சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட்டால் ஜலதோஷம், இருமல் எல்லாம் போய்விடும்.

“போய்ச் செய்து கொடு, மூன்றே நாளில் சரியாகிவிடும்”.

“சரி மாமி! அப்படியே செய்யறேன்!”

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments