இதழ் – 4

Contest Poster Copy 1

பூஞ்சிட்டுஉங்கள் வீட்டு சுட்டிகள் தமிழோடு வளர்ந்து விளையாட, ஒவ்வொரு மாதமும்,உங்களைத்தேடி – பூஞ்சிட்டு poonchittu.comமேலும் படிக்க…

Secret Garden

ரோஜாத் தோட்டம் தெரிந்தது! பூட்டப்பட்ட அந்தப் பழைய கதவைப் பார்த்த உடனேயே இது தான் அந்த ரகசியத் தோட்டத்தின் வாசல் என்று மேரிக்கு உறுதியாகத் தெரிந்து விட்டது. கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். நல்ல வேளையாக யாரும் அருகில் இல்லை, அதனால் அவள் உள்ளே நுழைந்ததை யாரும் பார்க்கவில்லை. ரொம்ப நாளாக யாருமே அங்கு நுழையாததால் அந்தத் தோட்டமே புதர்கள் வளர்ந்து, நிறைய இலைகளும், குப்பையுமாகக் காட்சியளித்தது. பல இடங்களில்மேலும் படிக்க…

malaikottai

கருணை ததும்பும் அந்த முனிவர் பேசியதைக் கேட்டுத் திகைத்துப் போய் நின்ற துருவன் தன்னை ஒருவழியாகச் சமாளித்துக் கொண்டு அந்த முனிவரைப் பணிவுடன் வணங்கினான். அறிவும் ஞானமும் சேர்ந்து ஒளி வீசுகின்ற முனிவரின் முகத்தைக் கண்டதுமே துருவனின் மனதில் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் சேர்ந்து எழுந்தன. “அரசர், நம்மை ஒரு சரியான குருவிடம் தான் அனுப்பியிருக்கிறார். இவருடைய சொற்களைக் கேட்டுக் குறுகிய காலத்தில் நம்மால் முடிந்த அளவு கலைகளைக் கற்றுக் கொண்டுமேலும் படிக்க…

thoodhuvalai

‘லொக் லொக்’ அருண் இருமும் சத்தம் சமையல் அறையில் இருந்த மாலாவுக்குக் கேட்டது. அவள் அங்கிருந்து படுக்கை அறைக்குப் போய்ப் பார்த்தாள்.அருண் எழுந்து படுக்கையில் உட்கார்ந்து இருமிக் கொண்டு இருந்தான். “அம்மா! தொண்டை எல்லாம் ரொம்ப வலிக்குது மா!” “சரிடா கண்ணா! பக்கத்து வீட்டு லக்ஷ்மி பாட்டி கிட்டே கேட்கிறேன். அவங்க ஏதாவது வீட்டு வைத்தியம் சொல்லுவாங்க, சரியாயிடும், கவலைப்படாதே! “சரிம்மா!” பக்கத்து வீட்டு லக்ஷ்மி பாட்டியிடம் அருண் இருமலால்மேலும் படிக்க…

Mcraja

குழந்தைகளே! எம்.சி.ராஜா (1883 – 1943) எனச் சுருக்கமாக அறியப்படும் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்பவரைப் பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இவர் பள்ளி நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். ஆர்.ரங்கநாயகி அம்மாள் என்பவருடன் இணைந்து, மழலையர் பள்ளிப் பாடநூல் ஒன்றை வெளியிட்டார்.  நிலா நிலா ஓடி வா, காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, கை வீசம்மா கை வீசு போன்ற பிரபலமானமேலும் படிக்க…

dengue

“தாத்தா.. தாத்தா.. தாத்தா!” வீட்டின் தாழ்வாரத்திலிருந்து சத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தான் மனோ. “என்னடா ஏலம் போடுற?” கைபார்த்துக்  கொண்டிருந்த கீரைக் கட்டைக் கீழே வைத்தார் தாத்தா. “உடனே வெளியே வாங்க தாத்தா!” அனுவின் சத்தமும் சேர எழுந்து வெளியே வந்தவர் அலுத்துக் கொண்டே சொன்னார், “வந்துட்டேன்.. எதுக்குக் கூப்பிட்ட? “நாம் இங்கே இருக்கிற டயர், தேங்காய் சிரட்டை எல்லாத்தையும் க்ளீன் பண்ணனும்.. எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க.. வாங்க!” “ஏன்டாமேலும் படிக்க…

splatter2

வண்ணம் தீட்ட தூரிகைகள் (paint brush) பயன்படுத்தி இருப்போம். நாம் பல் துலக்க பயன்படுத்தும் தூரிகைகள் (tooth brush) கொண்டு கூட வண்ணம் தீட்டலாம். இப்போ நாம் வண்ணம் தீட்ட போறதில்லை. வண்ணங்களை தெளிக்க போறோம். அதை ஆங்கிலத்தில் splatter painting என்று சொல்லுவாங்க. பற்தூரிகை கொண்டு எப்படி இந்த படத்தை நாம் தீட்ட போகிறோம் என்று பார்க்கலாமா ? தேவையான பொருட்கள் : நகல் எடுக்க உதவும் உள்வெட்டுமேலும் படிக்க…

Kutti Thoongumoonji

முன்னொரு காலத்தில், விடிகாலையில் மேகங்கள் எல்லாம் ஆரஞ்சு  நிறமாகும்படியாக, சூரியன் மலை மேல் அப்போது தான் ஏறத்துவங்கி இருந்தான். ஒரு குட்டிக் குழந்தை அழகான வெள்ளைப் படுக்கையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது. ‘கண் விழித்து, எழுந்திரு, எழுந்திரு,’ என்று கடிகாரம் டிக் டிக் என்று குரல் எழுப்பியது.  ஆனால் குழந்தைக்குத் தூக்கத்தில் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. சன்னலுக்குப் பக்கத்தில் இருந்த மரத்தில் வாழ்ந்த ஒரு குருவி,  “நான் அவனைமேலும் படிக்க…

Chithirakadhai

பொக்கிஷத்தைத் தேடி.. இன்னிக்கு என்ன விளையாட்டு சொல்லித் தரலாம் இந்த சுட்டிப் பசங்களுக்கு.. என்று யோசனை செய்தபடி அமர்ந்திருந்தார் பட்டாபி தாத்தா.  “பலமான யோசனையில இருக்கீங்க போல.. என்ன விஷயம்?” என்று கேட்டுக் கொண்டே காபி எடுத்து வந்து தாத்தாவிடம் கொடுத்தாள் பார்வதி பாட்டி.  “ம்.. இந்த சுட்டிப் பசங்க கிட்ட புதுசா ஒரு விளையாட்டு விளையாடலாம்னு சொல்லிட்டேன்.. என்ன விளையாடலாம்னு யோசிக்கறேன்.. இந்த லாக்டவுன்ல பசங்களோட சேஃப்டி ரொம்பமேலும் படிக்க…

Theniyin Parisu

பல கோடி வருடங்களுக்கு முன்பு, நம் பூமியில் செடிகள், கொடிகள், மரங்கள் இவற்றின் தண்டுகள், இலைகள், பூக்கள், காய்கள், பழங்கள் தவிர மற்ற   அனைத்தும் அதாவது நீந்தும், ஊர்ந்து செல்லும், பறக்கும், நடக்கும், துள்ளிச்செல்லும் விலங்குகள் அனைத்தும் கறுப்பு வெள்ளை நிறத்தில்தான் இருந்தன!!  நம் கண்களில் வெள்ளைப் பின்புலத்தில் கருவிழிகள் உள்ளதல்லவா,  அதுபோலத்தான் எல்லா உயிரினங்களும் இருக்கும்.  (என்னது!! ஏற்கனவே  கற்பனை உலகத்திற்கு வந்து விட்டீர்களா? சமத்துக் குட்டிஸ்!!!) நிறங்கள்மேலும் படிக்க…