எல்லாரும் நல்லா இருக்கீங்களா?
தீபாவளி அன்னிக்கு உங்கள சந்திக்குறதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.. எல்லாரும் பளபளன்னு துணி போட்டுக்கிட்டு ஜோரா இருக்கீங்க போலயே!
ம்ம்.. அட.. தீபாவளி பலாகாரம் வாசனைக்கூட அடிக்குதே எனக்கு! இந்நேரம் நான் நம்ம ஊர்ல இருந்திருந்தேன் வைங்க.. காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் அதிரசம்.. முறுக்கு.. சீட.. ரவா லட்டுன்னு ஒரு கை பாத்திருப்பேன். என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தான்..
சரி நான் ஒருஜோக் சொல்லட்டா?
தீபாவளி அன்னிக்கு பொங்கல் சாப்பிடலாம்
ஆனா பொங்கல் அன்னிக்கு தீபாவளிய சாப்பிட முடியுமா?? முடியாதே!!
எப்படி.. நம்ம ஜோக்துவம்?
சரி சரி!
நீங்க எல்லாரும் அந்த அதிரசத்த முழுங்கிக்கிட்டே என்ன கன்னாபின்னான்னு திட்றது என் காதுல விழுது. அதனால நான் வந்த வேலய பாக்குறேன்.
அதாகபட்டது குழந்தைகளே இன்னிக்கு நாம லாஸ் ஏஞ்சல்ஸில் பாக்கப் போற இடம், டிஸ்னி லான்ட்!
பேர சொன்னதுமே சும்மா ஜில்லுன்னு ஜாலியா இருக்குல்ல.. அப்ப போய் பார்த்தா எப்படி இருக்கும்?போய் பாத்துடலாமா?!
போலாம் ஸ்சுவைங்க்க்க்க்க்க்க்க்ங்ங்ங்ங்..
டன்டடாய்ங்க்..
வணக்கம் பூஞ்சிட்டுகளே!டிஸ்னி லான்ட் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறது.
உலகத்தில ஏகப்பட்ட இடங்களில் நிறுவப்பட்டிருக்கிற டிஸ்னிலான்ட் அமெரிக்கால மொத்தம் ரெண்டு இடத்துல இருக்கு. ஒன்னு ஃப்ளோரிடா மாகாணத்துல. இன்னொன்னு இப்ப நாம இருக்குற லாஸ் ஏஞ்சலஸ்ல. ரெண்டு இடத்திலயும் சின்னசின்ன மாறுதல்களோட பெரிய அளவில் இயங்குற இந்த டிஸ்னி லான்ட்க்கு வந்து வருடா வருடம் சுத்திப்பாக்குற குழந்தைகள் எண்ணிக்கை லட்சக்கணக்குலயாம். அப்போ டிஸ்னி லான்ட் வருமானம்? அது கோடிக்கணக்குல இருக்குமாம்! ஹி ஹி ஹி.. !! அது சரி! வயசான பெரியவங்களக்கூட சின்னக்குழந்தைகளா மாத்தி ஆட்டம் போட வைக்குற டிஸ்னிக்கு, ஈடு்இணையேது?
அதோ.. அங்க தெரியுதே.. அதுதான் டிஸ்னியோட வாசல்
இங்கிருந்து ஒவ்வொரு தீம்( Theme) வாரியா உள்ளார போக ஆரம்பிச்சோம்னா கச்சேரி களைக்கட்ட ஆரம்பிச்சிரும். பெரும்பான்மையான குழந்தைகள் வயது அடிப்படையில் தனித்தனியா ஒருங்கினைக்கப்பட்ட விளையாட்டுகள் இருக்குற இடத்துல இருந்து ஆரம்பிப்பாங்க. ஏன்னா டிஸ்னிலான்ட் நல்லா ஆசைத்தீர சுத்திப்பாக்க முழுசா ரெண்டு நாளாகும். அதனால எதப் பண்ணினாலும் ப்ளான் பண்ணிப் பண்ணனும் .. அப்பதான் ஒன்னு விடாம பாக்கலாம்! வோகே..
இப்போ முதல்ல நாம பாக்கப்போறது அட்வென்ச்சர் லான்ட்
இதோட மையம் ஆப்பிரிக்க மற்றும் அமேசானியன் காடுகளும் அது சார்ந்த இடங்களும்.
பேருக்கு ஏற்ற மாதிரியே வந்திருக்கும் பார்வையாளர்களையும் குழந்தைகளையும் காட்டுக்குள்ள கடத்தி வேடிக்கை காட்டும் இந்த பகுதி.
அதோ அங்க பாருங்க அதான்
புகழ்பெற்ற இண்டியானா ஜோன்ஸ் அட்வென்சர்
அப்புறம் அது டார்ஸான் மர வீடு
அதோ அதோ அது வால்ட் டிஸ்னி மாயாஜால அறை
ஹ! ஹ! இந்த பக்கம் இந்த பக்கம் பாருங்க ஹய்யோ அதுதான் வரலாற்று புகழ்மிக்க டிஸ்னி ஜங்கிள் க்௹ஸ்..
ஹய்யோ முதல எத பாக்குறதுன்னே தெரியலயே..
ஒரே குழப்பமா இருக்கே!
இதுக்கு ஒரே வழி நம்ம க்ளோபம்மா கிட்ட குறிக்கேட்டுட வேண்டியது தான்!
ஜெய் க்ளோபம்மா..
அய்த்திரிக்கிடி கிரிகிரி
அம்மா செஞ்ச வடகறி
ஆறிப்போச்சு, சுந்தரி
இப்போவாச்சு எழுந்திரி
இல்லனா கொளுத்தப்போறேன் பூத்திரி
அய் அய் கவித கவித
ஆஹ் யய்யோ தாங்கல அடி உத
இதோ இதோ ஒரு விடுகத
அதோ திறந்து பாரு மாயாஜால அற!
ஆஹா க்ளோபம்மா வாக்கு கொடுத்துருச்சு!
குழந்தைகளே வாங்க இப்போ நாம
வால்ட் டிஸ்னியோட மாயஜால அறைக்கு போலாம்..
உள்ளே நுழஞ்சதுமே ஒரு மாயாஜால காட்டுக்குள்ள இருக்கறாப்ல இருக்குற இந்த அறைல நம்மை ஆவலாக வரவேற்கின்றன வித வித ஒலி எழுப்புற ஹவாயின், அமேசானியன் பறவைகள் மற்றும் விலங்குகளின் அசலான அனிமேட்டட் சத்தங்கள்!
அதுக்கப்பிறகு ஆரம்பிக்கிற பதினைஞ்சு நிமிஷ குறும்படத்துல நான்கு அழகழகான மக்காவ் பறவைகள் நமக்கு ஒரு அழகான கதைய சொல்றாங்க
ஆடியோ அனிமெடரானிக்ஸ்’ன்னு சொல்லப்படற அதிநவீன தொழில்நுட்பத்தால நம்ம கண்ணுக்கெதிரவே பறவைகளோட கீச்கீச் பட்டாம்பூச்சியோட சிறகுகள், விலங்குகளோட தட் தட், காட்டு இலைகளோட சலசலப்பு, சாரல்ன்னு அத்தனையையும் உக்கார்ந்த இடத்துலயே அனுபவிக்குற மாயாஜாலத்த நிகழ்த்துறதனால இந்த அறைக்கு கிடைச்ச பெயர் நூத்துக்கு இருநூறு சதம் அடிதூள் தான்!
இந்த மாயாஜாலத்த விட்டு வெளிய வர மனசே இல்ல! இருந்தாலும் தள்ளுபடி இல்லாம சந்தோஷமா இருக்கனுமே! அப்போ அடுத்த இடத்துக்கு போயிற வேண்டியதுதான்! எஸ் எஸ் நாம அடுத்து பாக்கப்போறது
இன்டியானா ஜோன்ஸ் அட்வென்சர்!
மொத்தமா நாலு நிமிஷம் நீடிக்கிற இந்த அட்வென்சர் சுற்ற ரசிக்காதவங்களே இருக்க முடியாதுன்னு சொல்லலாம்! அந்த அளவுக்கு இன்டியானோ ஜோன்ஸ் கதைகளின் முக்கியமான கதைக களங்களை கண் முன்னே காட்சிப்டுத்தியதோடு மட்டுமில்லாம ப்ரம்மாண்டமாகவும் திகலாகவும் சுத்தி சுத்தி வர அனுபவம் மனசுக்கும் உடலுக்கும் ராக்கெட் பட்டாசு மாதிரி ஜிவ வுன்னு ஒரு உற்சாகத்த கொடுக்கும்.
அட்வென்ச்ர் சுரங்க சுற்று
தீ ஜ்வாலை சுற்று
அம்வென்ச்ர் முடியும் இடம்
ஹப்பா! செம கொண்டாட்டமா இருக்குதுல்ல?
இருங்க இருங்க! நான் பாட்டுக்கு இங்க சுத்திக்கிட்டு இருந்தா நீங்க என்ன விட்டுட்டு புஸ்வானமா வெடிக்கறீங்க.. ஹ! புஸ்வானம் கலர் கலரா சூப்பரா இருக்கே! பாத்து பாத்து குட்டீஸ் கண்ல கைல தீப்பொறிப்படாம பத்திரமா விளையாடுங்க!
அண்ட் டோன்ட் வொர்ரி! எனக்கும் சுத்தி சுத்தி டையர்ட்டா ஆகிருச்சு. நான் கொஞ்சம் ரெஸ்ட்எடுத்துட்டு வரேன்! அது வரைக்கும் நீங்க ஜாலியா பாதுகாப்பா அம்மா அப்பா வீட்டுப் பெரியவங்க சொல் கேட்டு பத்திரமா தீபாவளிய கொண்டாடுங்க!
டாட்டா பட்டூஸ்!