நூல் : ஆமை காட்டிய அற்புத உலகம்
ஆசிரியர் : யெஸ். பாலபாரதி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ₹65
வாசிப்பு அனுபவம் :
கதையின் நாயகன் ஜுஜோ தனது நண்பர்களுடன் கடலுக்கடியில் உலா வருவதே கதை. ஆக்டோபஸ், சுறா மீன், டால்ஃபின், பவளப்பாறைகள், திருக்கை மீன்கள் என்று எல்லாவற்றையும் கதையில் பார்க்கலாம். இக்கதையைப் படிக்கும் போது கடல் குறித்தும், கடல் வாழ் உயிரினங்கள் குறித்தும், சுற்றுசூழல் மாசுபாடு குறித்தும் பல செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு அத்தியாயத்துடன் பெட்டிச் செய்தியாக ஆழ்கடல் பற்றிய அறிவியல் உண்மைகளும் அருமையாக உள்ளது. ஆமைக்கு உதவிய சிறுவர்களை அந்த ஆமை கடலுக்கு அடியில் அழைத்துச் சென்று கடலின் அதிசயங்களைக் காட்டுகிறது. நீங்களும் படித்துப் பாருங்கள்.
ஆசிரியர் குறிப்பு:
இவர் கவிதைகள், சிறுகதைகள், நாவல், மற்றும் சிறப்புக் குழந்தைகள் குறித்தான நூல்களையும் எழுதியுள்ளார்.
என் பெயர் ஜெயாசிங்காரவேலு.நான் கரூரில் இருக்கிறேன்.இரண்டு வருடமாக தளங்களில் எழுதி வருகிறேன்.கணிதம்,சிறப்புக்கல்வி படித்துள்ளேன்.