1.ராமு :ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?

சோமு : நான் சொல்லலை அவரு பதினெட்டு ‘பட்டி’க்குச் சொந்தக்காரருன்னு.

2.ராமு : வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?”

சோமு: “அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்.”

3.ராமு: முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. என்ன ஆச்சு..?”

சோமு: “டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு!”

4.ராமு: “உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக் கூடாதா?”

சோமு : “அதனால உனக்கென்ன?”

ராமு : “நாலுபேர் மத்தியில தூக்கி வைச்சுப் பேச முடியலையே”

5. ராமு : “அந்த டாக்டர், அஞ்சல் வழியில் சட்டம் படிக்கிறார்”

   சோமு : “எதுக்கு?”

    ராமு : “ஆபரேசன் பண்ண வர்றவங்களுக்கு அவரே உயில் எழுதப் போறாராம்”.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments