வணக்கம்‌ சிட்டுகளே!

எல்லோரும்‌ எப்படி‌ இருக்கீங்க? சென்ற‌மாத பூஞ்சிட்டின் பகுதிகளை எல்லாம் படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்திருந்ததா?

இந்த மாதம்‌சில புதிய‌பகுதிகளோடும், உங்களுக்குப் பிடித்த பகுதிகளோடும் மீண்டும் வந்திருக்கிறோம். படிச்சிப் பாருங்க.. உங்கள் கருத்துகளை எங்களிடம்‌ பகிர்ந்து கொள்ளுங்க..

சென்ற‌மாதப்‌போட்டியில் பங்கெடுத்த பூஞ்சிட்டுகளுக்கும் , வெற்றி பெற்ற பூஞ்சிட்டுகளுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்💐💐 ஹைஃபை 🙌🙌 வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் சில நாட்களில் உங்கள் வீடு தேடி வரும்.

இந்த மாதம் ஒரு சந்தோசமான‌ அறிவிப்போட வந்திருக்கோம். இந்த மாத இதழ் முதல் இனிவரும் இதழ்கள் , நம் தளத்தில் பதிவேற்றப்பட்டு 15 நாட்களுக்குள், கிண்டிலில் கிடைக்கும். உங்க அம்மா அப்பாகிட்ட கிண்டில் ‌ஆப் இருந்தா, நம் இதழை வாங்கி, பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.. இலவசம் அறிவிக்கும் நாட்களில் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. கிண்டில் அன்லிமிடெட் இருந்தால் இலவசமாகவே பதிவிறக்கம் செய்து படிக்கலாம்..

ஜாலியான செய்தி இல்லையா? தொடர்ந்து நம்‌ பூஞ்சிட்டு குடும்பத்தோடு இணைந்திருங்கள். சிறகடித்துப் பறந்திடலாம🧚🧚🧚

பூஞ்சிட்டு.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments