வணக்கம் பூஞ்சிட்டுகளே!
எல்லாரும் எப்படி இருக்கீங்க ?
இங்க நானும் நல்லா இருக்கேன்..
போன மாசம் அரிசோனா நெவாடான்னு தி க்ராண்ட் கேன்யன்னு ஆங்கிலத்துல அழைக்கப்படுகிற பள்ளத்தாக்கை போய் பாத்தோம் இல்லையா ? எவ்வளவு அழகான செங்குத்தான நீள நீளமான மலைகள் இல்ல? அதே மாதிரியே இன்னைக்கும் உங்கள ஒரு அருமையான இடத்துக்கு கூட்டிட்டு போகப்போறேன்..
இது உங்க எல்லாருக்கும் ஏற்கனவே தெரிஞ்ச இடமும் கூட..
அப்படி என்ன இடம்ன்னு யோசிக்கறீங்களா ?
இன்னைக்கு நாம போகப்போற இடம்
உலகப்புகழ் பெற்ற நயாகரா நீழ்வீச்சி!!
பேர சொன்னதுமே ஜூல்லுன்னு நயாகரா சாரல் அடிக்குதே..
என்ன குட்டீஸ் நாயகராவுல நனைய கிளம்ப தயாராகிட்டீங்களா ?
அப்படியே கண்ண மூடிட்டு என்னை கெட்டியா பிடிச்சுக்கோங்க..
ஸ்வாய்ங்ன்னு விடு ஜூட்!
டண்டாடாய்ங்!
ஹப்பா எவ்வளவு ப்ராம்மண்டம் பாத்தீங்களா!!
இந்த உயரம் .. தொட்டுடற மாதிரி வானம்.. சிலுசிலுன்னு கொட்டிக்கிட்டே இருக்கிற நயாகரா பாக்க பாக்க கண் கொள்ளா காட்சி தான்!
எப்படி தி க்ராண்ட் கேன்யன் நாலா புறமும் பரந்து விரிஞ்சு இருந்ததோ அதே மாதிரி தான் நாயகராவும் . அமெரிக்க நாட்டையும் கனடா நாட்டையும் இணைக்கிற மாதிரி அமைஞ்சிருக்கிற நயாகரா நீழ்வீச்சிய இரண்டு நாடுகள்ல இருந்தும் பாத்து ரசிக்கலாம்.. பொதுவா கனடா நாட்டு பகுதில இருந்து பாக்குற நயாகரா ரொம்பவே அழகா இருக்கும்ன்னு சொல்லுவாங்க..
இன்னைக்கு நாம நியூயார்க் நகரத்தோட
நாயகராவை தான் பாக்கபோறோம்
கிட்டத்தட்ட 12000 வருஷத்துக்கு முன்னாடி கடைசி பனி யுகம் அதாவது ஐஸ் ஏஜ் அப்போ உருவானது தான் இந்த நயாகரா பேரருவி.. இப்படி ஒன்னு இருக்குன்னு மனிதர்கள் கண்டுபிடிச்சு 250 வருஷங்கள் ஆகுது..
அதீத குளிர் மற்றும் பனி காலத்து சமயத்துல நயாகரா மொத்தமும் உறைஞ்சு போய் பனிக்கட்டியா நிக்குற அதிசயமும் நடக்கும்.. இதோ இப்போ நடந்துகிட்டு இருக்குற மாதிரி.
நயாகரால மொத்தம் மூணு அழகான இடங்கள் இருக்கு..
முதல்ல ‘குதிரை லாட’ நீர்வீழ்ச்சி ..
ஒரு குதிரை லாடம் எப்படி U மாதிரி வளைஞ்சு இருக்கோ அதே மாதிரி வடிவத்துல அழகா அமைஞ்சு இருக்கிறதால இந்த நீர்வீழ்ச்சிக்கு இதுவே காரணப்பெயராக ஆகிடுச்சு ..
இந்த வளைவுல இருந்து நீர் அருவி கொட்டுற அழகே தனி அழகு தான். என்ன எப்போ பார்த்தாலும் தண்ணி கொட்டுது தண்ணி கொட்டுது ? நீர் வீழ்ச்சின்னா தண்ணி கொட்டத்தானே செய்யும்ன்னு நீங்க கேக்கறது எனக்கு கேக்குது !! அது வேற ஒண்ணுமில்ல .. உலகத்துல இருக்குற அத்தனை அருவிகள்ல இருந்து பெருக்கெடுக்குற தண்ணிய விட நயாகரா அருவியில் கொட்டுற தண்ணீர் பல கன அடி உயர்ந்தது மட்டுமில்ல மிக மிக அதிகமானதும் கூட. அதனாலேயே இங்க மின்சார உற்பத்தியும் ஜோரா நடக்கும்.
சரி இப்போ வாங்க நம்ம நயாகராவோட அடுத்த பகுதியான கேவ் ஆப் த வின்ட்ஸ் ( Cave of the Winds )
இங்கே கிட்டத்தட்ட நம்ம குற்றாலம் மாதிரி நம்ம தலை மேல தொப்பு தொப்புன்னு சாரல் பிச்சு உதறும்.. குளிரும் காத்தும் சாரலும் நயாகாராவோட ப்ரம்மீண்டத்துக்கே அழகு சேர்க்கிற மாதிரி ரொம்ப அழகான குகை வடிவ அருவி இது!
அடுத்தது நாம பாக்கப்போறது ,மெயிட் ஆஃப் த மிஸ்ட் (Maid of the Mist)
நாயகரவோட 3 அருவிகளையும் படகு சவாரி செஞ்சு கிட்ட போய் பாக்க ஒரு அழகான ஏற்பாடு தான் மெய்ட் ஆஃப் த மிஸ்ட் . இந்த படகு சவாரில குதிரை லாட அருவிக்கு ரொம்ப பக்கத்துல போய்
நம்மளால நாயகரவோட அழக ரசிக்க முடியும்.
என்ன குழந்தைகளே நயாகரா என்ன ஒரு இயற்கை அழகுல ?!
இதே மாதிரி அடுத்த மாதமும் ஒரு அழகான இடத்துக்கு உங்கள கூட்டிட்டு போக காத்துக்கிட்டு இருக்கேன்.. அதுவரை உங்களிடம் இருந்து ஜில்லென்று சிட்டாக பறந்து விடைப்பெறுவது உங்கள் பூஞ்சிட்டு .. வரட்டுமா செல்லங்களே!