– சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் அதிகாரி
பெக்கி விட்சன் உயர்நிலைப் பள்ளியின் இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தபோது, நாசா அதன் முதல் பெண் விண்வெளி வீராங்கனைகளை தேர்ந்தெடுத்தது. நிலவில் தரையிறங்கும் அவருடைய கனவு நனவானது. பெக்கி விட்சன் ஒரு விண்வெளி வீராங்கனை!
லோவாவில் ஒரு கிராமப்புற விவசாய குடும்பத்தை சேர்ந்த பெக்கிக்கு விண்வெளி வீராங்கனையாக என்ன செய்யவேண்டும் என்ற விவரம்கூட தெரியாது. ஆனால், உயிரியல் மற்றும் வேதியியல் துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தால் பி.எச்.டி படித்தார்.
விஞ்ஞானிகளில் சிலர் மட்டுமே விண்வெளி வீரர்களாக ஆகமுடிகிறது. அதிலும் பலர் ராணுவப் பின்னணியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். இந்த சூழ்நிலையில் 1996 ஆம் ஆண்டில் பெக்கி விண்வெளி வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2002 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மேற்கொண்ட பெக்கிதான் ISS இன் (சர்வதேச விண்வெளி நிலையம்) முதல் அறிவியல் அதிகாரி என்று அறியப்படுகிறார். ஸ்டார் ட்ரெக்கின், ஸ்போக்குடன் இந்த பெருமையை பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறார் பெக்கி.
ஒரு விஞ்ஞானியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் வேறு எங்கும் இல்லாத அளவு தனிப்பட்ட சிறந்த ஆராய்ச்சி சூழல் கிடைப்பதாகக் கூறுகிறார் பெக்கி.
விண்வெளி நிலையத்தில் பயிர்களை வளர்க்கும் பரிசோதனை முயற்சிகளிலும், திரவ இயக்கவியல் மூலம் புற்றுநோய்க்கு சாத்தியமான சிகிச்சைகள் பற்றிய ஆய்வுகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
“விண்வெளியில் நாங்கள் மேற்கொள்ளும் பன்முகத்தன்மை கொண்ட ஆராய்ச்சிகள் எனக்கு மிகவும் பிடித்தமானது. தொலைதூர இடங்களுக்கு செல்லும் நமது முயற்சியில், எதிர்காலத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்” என்கிறார்.
வாண்டா டயஸ்-மெர்சிட்: வானியலை அணுகக்கூடியதாக்கியவர்.
பியூரெடோ ரிகோ பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவியாக இருந்த வானவியல் ஆராய்ச்சியாளர் வாண்டா டயஸ்-மெர்சிட்டின் கண்களில் புள்ளிகள் தோன்றத் தொடங்கியது.
நீரிழிவு ரெட்டினோபதி நோயினால், தான் பார்வையை விரைவிலேயே இழக்க நேரிடும் என்று தெரிந்துகொண்ட வாண்டா, தான் தேர்ந்தெடுத்த பணியை, விட்டுவிடக்கூடாது என்று தீர்மானித்தார்.
தரவு புலனுணர்வு (Data sonification) பற்றிய நாசாவின் ஒரு பயிற்சியில் கலந்துக் கொண்ட வாண்டாவுக்கு அதுவொரு அரிய வாய்ப்பாக இருந்தது. இந்த தரவு புலனுணர்வு, நட்சத்திரங்களில் இருந்து வரும் செயற்கைக்கோள் தகவலை மொழிபெயர்த்தது.
இது, காட்சியை வரைபடங்களுக்குப் பதிலாக, ஒலி அலைகளாகப் உருவாக்கும். இது வானியலாளர்களால் பெரிதும் நம்பப்படுவது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மென்பொருளை மேலும் மேம்படுத்தும் முயற்சிகளில் வாண்டா டயஸ்-மெர்சிட் ஈடுபட்டார். இதனால் வானியல் அறிஞர்களுக்கு மிகவும் துல்லியமான தரவுகள் கிடைத்தன. இதனால் முன்னர் வரம்புக்கு உட்பட்டிருந்த இந்த துறையில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு பல ஆராய்ச்சியாளர்களுக்கு உத்வேகம் கிடைத்தது.
தற்போது, தென்னாப்பிரிக்க வானவியல் அபிவிருத்தி அலுவலகத்தில் (South African Office of Astronomy for Development) பணிபுரியும் வாண்டே, பார்வையற்ற மாணவர்களுக்கு, வானியல் உலகத்திற்கான புதிய பாதையை காட்டுகிறார்.
“நான் மிகவும் விரும்பும் வானியல் துறையில் எந்தவொரு பாகுபாடும் இருக்கக்கூடாது என்று விரும்புகிறேன்” என்று சொல்கிறார் வாண்டா டயஸ்-மெர்சிட்டின்.
என் பெயர் ஜெயாசிங்காரவேலு.நான் கரூரில் இருக்கிறேன்.இரண்டு வருடமாக தளங்களில் எழுதி வருகிறேன்.கணிதம்,சிறப்புக்கல்வி படித்துள்ளேன்.