அபி, சுபி இருவரும் கட்டிலுக்கு அடியில் என்ன சத்தம் கேட்கிறது என்று குனிந்து பார்த்தார்கள். கட்டிலுக்கு அடியில் ஐந்து விலங்குகள் தெரிந்தன. அவை யானை, இரண்டு குட்டி முயல்கள், புலி மற்றும் கங்காரு. ஆம்! சட்டையில் இருந்த அதே விலங்குகள் தான். இவை சட்டையில் இருந்து வெளியே குதித்திருந்தன!

அபியும், சுபியும் விலங்குகளைப் பார்த்து பயந்து போயினர்.

animaltoys
படம்: அப்புசிவா

“எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம். நாங்க ரொம்ப நல்ல விலங்குங்க, இதோ இந்த புலியார் தான் கொஞ்சம் கோவப்படுவாரு” என்று இரண்டு முயல்களும் சிரிப்புடன் கூறின.

“சும்மா சும்மா என்னைப் போட்டுக் குடுக்காதீங்கடா, நீங்க ரெண்டு பேரும் கூட தான் குறும்பா இருக்கீங்க. அதை சொன்னீங்களா?” என்றது புலி.

“உங்க ரெண்டு பேருக்கும் எப்போதுமே ஒத்துக்காது, சரி நம்ம எல்லாரும் இப்ப ஃப்ரெண்ட்ஸ் ஆயிடலாமா அபி, சுபி?” என்றது கங்காரு.

“ம்ம் உங்களுக்கு எப்படி எங்க பெயர் தெரியும்?” என்று கேட்டாள் சுபி.

யானை, “உங்க அம்மா உங்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் போது நாங்க அதைக் கேட்டோம்”.

“அபி, சுபி! ரெண்டு பேரும் பால் குடிக்க வாங்க” என்று அழைத்தார் அவர்களின் அம்மா நிறைமதி.

“ஷ்ஷ்! எல்லாரும் அமைதியா இருங்க. யாரோ வர சத்தம் கேக்குது” என்றது யானை.

அபி, “அது எங்க அம்மா தான்!” என்றாள்.

இதைக் கேட்டதும் புலி மிகவும் பயந்து போனது. ஏனென்றால் அபி, சுபியின் அம்மா அதை விலங்குகள் காப்பகத்திற்கு அனுப்பிவிடுவார்களோ என்கிற பயம் தான்.

“ஹி ஹி! ஒரு புலியா இருந்துக்கிட்டு இப்புடி பயப்படலாமா புலி அண்ணா?” என்றன இரு முயல்களும்.

கங்காரு, “நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க” என்றது.

அப்போது அபிக்கும், சுபிக்கும் ஒரு யோசனை வந்தது. “எங்களுக்கு ஒரு யோசனை வந்துடுச்சு. நீங்க எல்லாரும் சின்னதா தானே இருக்கீங்க, அதனால நீங்க எங்க ஸ்கூல் பேக்ல ஒளிஞ்சுக்கோங்க!” என்றாள் அபி.

எல்லா விலங்குகளும் அபி மற்றும் சுபியின் பள்ளிக்கூடப் பையில் ஒளிந்து கொண்டார்கள். அபி, சுபியின் அம்மா அந்த விலங்குகளை கவனிக்கவில்லை. இருவரும் பால் மற்றும் பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு கை கழுவிவிட்டு வந்தார்கள்.

அப்போது அபி மின்விசிறியின் ஸ்விட்சை போடப் போனாள். அவள் கை ஈரமாக இருந்தது. அதைப் பார்த்த யானை அவளை தடுத்து நிறுத்தி அறிவுரை சொன்னது. ஈரமான கையோடு மின்சாதனப் பொருட்களை இயக்கினால்  ஆபத்து நேரிடும் என்று விளக்கிக் கூறியது கங்காரு.

“அபி, சுபி! சீக்கிரம் தூங்குங்க. நாளைக்கு காலையில எல்லாரும் ஊருக்குப் போகணும்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள் அவர்களின் அம்மா.

“அய்யய்யோ! உங்களை எல்லாம் எப்படி தனியா விட்டுப் போறது?” என்று விலங்குகளிடம் கவலையுடன் கூறினாள் அபி.

——- தொடரும் —-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments