ஹாய் ஃப்ரெண்ட்ஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க… நாங்களும் நல்லா இருக்கோம்..
சுனிதா, “ராமு! இன்னிக்கு தாத்தா பாட்டி அம்மா அப்பா எல்லாரும் வெளில போயிருக்காங்க.. அவங்க வரதுக்குள்ள இப்போ நாம ரெண்டு பேரும் சேர்ந்து எல்லாருக்குமான ஒரு ஈசியான ஸ்னாக்ஸ் செய்ய போறோம்” என்றாள்.
“வாவ்! என்ன அக்கா அது?”
“அதுக்குத் தேவையான பொருள் ஒரு கப் சிகப்பு அவல், அதே அளவு வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை , ஒரு கப் தேங்காய் துருவல், ஏலக்காய், பொடித்த முந்திரி, நெய் தேவைக்கு ஏற்ப”
“ராமு நான் மிக்சிய எடுக்கிறேன், நீ அந்த ஜாரை எடு!” என்றபடி இருவரும் ஆளுக்கொரு வேலையைச் செய்ய ஆரம்பித்தனர்.
“இப்போ மிக்சி ஜார் எடுத்துக்கறேன், அதுல ஒரு கப் சிகப்பு அவல்ல பர்ஸ்ட் சேத்துக்கறேன், அடுத்ததா பொடி பண்ணின வெல்லம் சேத்துக்கறேன், வாசனைக்கு அஞ்சு ஏலக்காய் சேர்த்து கொஞ்சம் கொர கொரப்பா அரைச்சுக்கனும்.
அதுகூட தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரே ஒருமுறை மிக்சிய ஓடவிட்டு உடனே ஆஃப் பண்ணிடனும். இப்போ இது எல்லாத்தையும் ஒரு பாத்திரத்தில மாத்திட்டு பொடியா ஒடச்சி வச்ச முந்திரிய சேர்த்து கலந்துக்கனும். அப்பறம் அதைக் குட்டி குட்டி உருண்டையாக உருட்டி இப்படி எடுத்து வச்சுட்டேன்”
“ம்ம் சுனிதா அக்கா! பாக்கவே ரொம்ப சூப்பரா இருக்கு.. வா வா சீக்கிரம் வா சாப்டலாம்”
“இரு ராமு. இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லாரும் வந்துடுவாங்க. ஒண்ணா சேர்ந்து சாப்டலாம் சரியா?”
“சரி அக்கா”
சிறிது நேரத்தில் அனைவரும் வந்ததும் அனைவரும் ஒன்றாக உண்டனர்.
எல்லாருக்கும் மகிழ்ச்சி!
பிரதிலிபி தளத்தில் சிறுகதைகள் , குறுநாவல் எழுதிக்கொண்டு இருக்கிறேன். தமிழ் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன்.