கீச் கீச் – 14

வணக்கம் சிட்டுகளே!

எல்லோரும் எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் சுகமா?

மூன்றாம் அலை பற்றிய பயம் மனதின் ஓரமாய் மினுக் மினுக் என்று தெரிந்தபடி இருக்க, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.  பெரியவர்கள், “அது கூட்டமான இடம்; அங்கே செல்ல வேண்டாம்!” என்றால் கேட்டுக் கொள்ளுங்கள். நாளைய தேசத்தின் ஆணி வேர்களாகிய நீங்கள், அனைவருக்கும் முன்மாதிரியாக வெளியே எப்போதும் முகக்கவசம் அணியுங்கள்.

அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தை ஓரளவு எட்டியிருந்த நாம், அனைவருக்கும் சமமான கல்வி என்ற இலக்கை நோக்கி போய்க்கொண்டிருந்த வேளையில் இந்த கொரோனா, நம்மை பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியிருக்கிறது. ஆன்லைன் வழி கல்வி, ‘கற்றல்’ வாய்ப்புகளில் உண்டாக்கியுள்ள ஏற்றத்தாழ்வு உடனடியாகக் களையப்படவேண்டும் என்பதை பூஞ்சிட்டு ஆர்வமுடன் எதிர்பார்க்கிறது.

பூஞ்சிட்டு தொடங்கி ஓராண்டு நிறைவானதை முன்னிட்டு நாம் நடத்திய சிறார் கதைப்போட்டியில் பலரும் பங்கேற்று பரிசுகள் வென்றுள்ளனர். எழுத்தாளர்களுக்கு எங்கள் அன்பு வாழ்த்துக்கள் 🎉🎉

பரிசு பெற்ற கதைகளில் இரண்டு கதைகள் இந்த மாதமும் மற்ற இரண்டு கதைகள் அடுத்த மாதமும் நம் தளத்தில் பதிவேற்றப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..

பூஞ்சிட்டின் அனைத்துப் பகுதிகளும் உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. படித்து மகிழுங்கள். மறக்காமல் நம் தளத்தைப் பற்றி உங்கள் தோழர் தோழிகளுக்குச் சொல்லுங்கள்.

நன்றி🎉🎉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *