ஹாய் நண்பர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க… இன்னிக்கு நாங்க ரெண்டு பேரும் தாத்தா பாட்டி கூட சேர்ந்து ஹெல்தியான ஸ்நாக்ஸ் செய்ய போறோம்.. ஒன்று காரஅவல், இன்னொன்று உப்பு உருண்டை. அதற்கு தேவையான பொருட்கள இப்போ பார்ப்போம்… தாத்தா நீங்க சொல்லுங்க…
#கார அவல்
ம்ம் சொல்லலாமே சுனிதா.. கார அவல் செய்யத் தேவையான பொருட்கள்:
அவல் – ஒரு கப்
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் – கால் கப்
இதெல்லாம் முதல்ல எடுத்து வச்சிடனும், அதுக்கப்புறம்
செய்முறை :
அவலை 10 நிமிடம் ஊற வைக்கவும். ஊறியதும் அதை தண்ணீரிலிருந்து பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொறிக்கவும். அடுத்ததாக காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சிறிதளவு சேர்த்து வதக்கவும்.
தற்போது அவலை சேர்த்து கிளறவும். அதோடு தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கிளறி இறக்கி விடவும்.
கார அவல் தயார்.
“ம்ம் தாத்தா பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு…
“பாட்டி அடுத்து என்ன பண்ணனும்னு சொல்லுங்க?..
“இப்போ நம்ம உப்பு உருண்டை எப்படி செய்யறதுனு பார்க்கலாம்.
அதற்குத் தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு – ஒரு கப்
தேங்காய் – அரை கப்
கடுகு – கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
செய்முறை :
பச்சரிசி மாவை உப்பு சேர்த்து சற்று மிதமான வெந்நீரில் தளதளவென பிசைந்துகொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து அதோடு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு , நறுக்கிய தேங்காய் சேர்த்து வதக்கி பிசைந்த மாவில் கொட்டி மீண்டும் பிசையவும்.
இறுதியாக அவற்றை சிறுசிறு உருண்டைகளாகப் பிசைந்து இட்லி குக்கரில் 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.உப்பு உருண்டை தயார்.
ஹைய்யா இது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. சூப்பர் பாட்டி .. ரொம்ப நல்லா இருக்கு..
சுட்டீஸ்! நீங்களும் உங்க வீட்ல செஞ்சு பாத்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க!
பிரதிலிபி தளத்தில் சிறுகதைகள் , குறுநாவல் எழுதிக்கொண்டு இருக்கிறேன். தமிழ் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன்.