
பள்ளிக் கூடம் போகலாம்
மளமள வெனக் கிளம்பியே
பளீர் சீருடை உடுத்தியே
பள்ளிக் கூடம் போகலாம்
வீட்டுச் சிறையி லிருந்து
விட்டு விடுதலை யாகி
சிட்டுக் குருவி போலே
சிட்டாய்ப் பறக்கலாம் பள்ளிக்கு!
இனிய நண்பரோ டிணைந்து
கதைகள் பேசிக் களிக்கலாம்
ஓடிப் பிடித்து ஆடலாம்
ஆடிப் பாடி மகிழலாம்
எண் ணெழுத்து இரண்டையும்
இடை யிடையே கற்கலாம்
படிப் படியாய் முன்னேறி
படிப்பில் மேன்மை அடையலாம்
நல்ல நல்ல நூல்களை
நாடி நாமும் பயின்றால்
பல்துறை வித்தகர் ஆகலாம் பார் போற்ற வாழலாம்