ஹாய் சுட்டீஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க… நாங்களும் ரொம்ப நல்லா இருக்கோம்… ரொம்ப நாள் கழிச்சு உங்கள மீட் பண்றேன்… இன்னிக்கு ரொம்ப ஈஸியான மற்றும் ஹெல்தியான ஒரு டிஷ் பார்க்கலாமா…

“பாட்டி  இன்னிக்கு என்ன டின்னர் பண்ணப் போறீங்க?”

“வாடா ராமு, இன்னிக்கு சப்பாத்தியும் தொட்டுக்க கிழங்கும் செய்யலாம்னு இருக்கேன்”

“எப்ப பாத்தாலும் ஏன்  இந்த சப்பாத்தியவே  செய்றீங்க? எனக்கு போர் அடிக்குது பாட்டி!”

“சரி உனக்கு மட்டும் பூரி பண்ணித் தரட்டுமா?”

“எனக்கு புதுசா ஏதாவது செஞ்சு தாங்க பாட்டி..”

“டேய் ராமு! பாட்டிகிட்ட என்ன வம்பு பண்ணிட்டு இருக்க?”என்றபடி தாத்தா அடுக்களைக்கு வந்தார்.

“தாத்தா நீங்களே பாருங்க, எப்ப பாத்தாலும் சப்பாத்தியவே செய்றாங்க எனக்கு புதுசா ஏதாவது சாப்ட வேணும்”

“அவ்வளோ தானே இன்னிக்கு சுனிதா ஒரு புது டிஷ் சொன்னா அதையே நாம்ப இப்போ செய்யலாம்.. சரியா?”

“ஹே.. ஜாலி ஜாலி… நான் என்ன உதவி பண்ணணும்னு சொல்லுங்க தாத்தா”

“பாட்டி சப்பாத்தி மாவு ரெடியா பிசைஞ்சு வச்சுருக்காங்க, நீ போய் மூனு பெரிய வெங்காயம், ரெண்டு பச்சைமிளகாய் எடுத்துட்டு வா, நான் போய் கடாய் (ஃபேன்) எடுத்துட்டு வர்றேன்”

“ம்ம் சரி சரி தாத்தா”

“முதல்ல கோதுமை மாவ கொஞ்சம் கெட்டியா பிசைஞ்சு வச்சு ஒரு பத்து நிமிஷம் அத ஊர விட்டுட்டு…

அதுக்குள்ள நமக்கு தேவையான மசாலாவ ரெடி பண்ணிக்கலாம்..

வெங்காயத்த நீள் வாக்கில் மெல்லிசாக நறுக்கக் கொள்ளவும், இரண்டு பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும், அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு   இதை எல்லாம் ரெடியா எடுத்து வச்சிட்டு மசாலாவ செய்ய ஆரம்பிப்போம்.

கடாய் அடுப்பில வச்சு அது நல்லா சூடானதும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில வெட்டி வச்ச வெங்காயத்த போட்டு வதக்கனும்.

பாதி வதங்குனதும் அதுகூட நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்துடனும் கூடவே இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நல்லா பிரட்டி விடனும், பச்சை வாசனை போனதும் அதுல மல்லித்தூள் ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் அரை ஸ்பூன் சேர்த்து கிளறனும், கடைசியா நமக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லா கிளறி இறக்கனும்.

மசாலா சூடு தணியரதுக்குள்ள நம்ம சப்பாத்தி செய்யலாமா…

மீடியம் சைஸ்ஸா மாவ உருட்டி  அத சப்பாத்தி மாதிரி பெரிசா இல்லாம, பூரி மாதிரி சின்ன தாவும் இல்ல நடுத்தரமா அப்பளம் மாதிரி தேச்சு வச்சுடனும், அதுல நம்ம செஞ்சு வச்ச மசாலாவ சேர்த்து கொஞ்சம் சீஸ் சேர்த்து (சீஸ் தேவைப்பட்டால்) கொழுக்கட்டையை மடிக்கற மாதிரி மடிக்கனும்.

மேல இருக்க எக்ஸ்ட்ரா மாவை எடுத்துட்டு லேசா அந்த சப்பாத்திய கையால அழுத்திவிட்டனும்.இதே மாதிரி எல்லா மாவையும் செஞ்சு வச்சிட்டனும்.

இது ரெண்டு விதமாக செய்யலாம்

1.

கடாய் (ஃபேன்) சூடு பண்ணி எண்ணெய் விட்டு சூடானதும் அதில கடுகு போட்டு வெடிச்சதும் பொடியா நறுக்குன கொத்தமல்லி தழை தூவி அதுல இந்த சப்பாத்திய போட்டு எல்லா பக்கமும் நல்லா ரோஸ்ட் பண்ணி எடுத்தா நம்மளோட ஸ்டஃப்டு ஆனியன் ரெடி.

Stuffed Onion 1

“ம்ம் பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு தாத்தா .. அதுசரி அது என்ன இட்லி குக்கர் வச்சு இருக்கீங்க… அது எதுக்கு?”

“ம் சொல்றேன்.. இது இன்னொரு விதம்”

2.

நம்ம செஞ்சு வச்ச சப்பாத்தி ஸ்டப்பிங்க பத்து நிமிஷம் இட்லி குக்கர்ல வேகவைச்சு மோமோஸாவும் செஞ்சு சாப்டலாம்…

Stuffed Onion 2

 “வாங்க ராமு, சுனிதா இந்த தாத்தா செஞ்ச டிஷ் எப்படி இருக்கு , சாப்டு சொல்லுங்க..”

“ம்ம் தாத்தா ரொம்ப நல்லா இருக்கு.. இதே மாதிரி எங்களுக்கு நெறய டிஷ் செஞ்சு தரீங்களா?”

“கண்டிப்பா டா கண்ணா!”

என்ன சுட்டீஸ்! நீங்களும் உங்க வீட்ல இத ட்ரை பண்ணி பார்த்துட்டு எப்படி இருக்குனு எனக்கு சொல்லுங்க..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments