வணக்கம் குழந்தைகளே!

அனுபவங்களை அறிந்து கொள்ளுங்கள்!

ரோஹன் 5ம் வகுப்பு படித்து கொண்டிருந்தான். அவன் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் பூங்காவிற்கென்று ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே சாய்ந்தர நேரங்களில் சிறுவர் சிறுமிகள் இணைந்து கண்ணாம்பூச்சி விளையாட்டு, பந்துகளை வைத்து விளையாடுதல் என ஏதோ விளையாடி கொண்டிருப்பார்கள். பெரியவர்கள் சில நிமிடங்கள் நடந்து கொண்டே சிறு பிள்ளைகளையும் ஒரு கண் பார்த்து கொள்வார்கள். அப்படி தினமும் சாய்ந்தர வேளைகளில் மாதுரி அத்தையும் அங்கு வந்து அவர்களது 4 வயது பையன் விமலனை மண்ணில் விளையாட விட்டு அத்தையும் அருகில் அமர்ந்து கொள்வார். ரோஹன் மற்றும் நண்பர்களும் மாதுரி அத்தையை பார்க்கும்போது ஒரு புன்னகை புரிந்து செல்வர்.

ஒரு நாள் நண்பர்கள் குழு மாதுரி அத்தையிடம் வந்தது, “அத்தை, நாளைக்கு எங்கள் பள்ளியில் எல்லோரையும் பக்கத்துல யார்கிட்டயாது எதாவது அவங்களோட சொந்த அனுபவ கதை கேட்டுட்டு வந்து சொல்ல சொன்னாங்க. எங்களுக்கு எதாவது உங்களோட அனுபவ கதை சொல்லுங்க” அப்படின்னு கேட்டாங்க. மாதுரி அத்தையும் கொஞ்சம் யோசிச்சிட்டு சிரிச்சிட்டு, சரி குழந்தைகளே சொல்றேன். கேளுங்க…

“இப்போ சமீபத்தில ஒரு நேர்காணல்(இன்டெர்வியூ ) போயிருந்தேன். ஒரு பேனாவை குடுத்து இந்த பேனாவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்னு கேட்டாங்க, நானும் எழுதலாம், குறிப்புகள் எடுக்கலாம், புத்தகம் வாசிக்கும்போது அடிக்கோடிடலாம், அதிலுள்ள பாகங்களை வைத்து இது மூடி, ரீபில், அடிப்பகுதி, நிறைய வண்ணங்கள்ல பேனா இருக்கு இந்த மாதிரி என் குழந்தைக்கு சொல்லி குடுக்கலாம், கோலம் போடலாம், என்கிட்டே யாராவது வம்பு பண்ணினா குத்திருவேன்னு மிரட்டலாம், பயன்படுத்தி முடித்த பேனா மூடியை வைத்து மணல் அள்ளி விளையாட என் குழந்தைக்கு குடுக்கலாம்னு சொல்லிட்டே போனேன். ஆனால் ஒன்னு இந்த மாதிரி ஒரு கேள்வியை நான் அப்போ எதிர்பார்க்கலை. இதை சிந்திக்கும்போது என்னோட மூளை வேகமா செயல்பட்டது” இது ஒரு அனுபவம்டா அப்டின்னாங்க மாதுரி அத்தை.

பசங்களும் “சூப்பர் அத்தை, நாங்க பேனாவை ஸ்கேல் மாதிரி வச்சி கோடு போடுவோம். ஒரு விரல்ல எவ்வளவு நேரம் புடிக்க முடியுதுனு பார்ப்போம். இந்த அனுபவத்தை நான் சொல்றேன் ஸ்கூல்ல” என்று ரோஹன் அதை எடுத்து கொண்டான். அடுத்து சிறுவர் படை நடராஜ் தாத்தாவை நோக்கி நகர்ந்தது அவரின் அனுபவ கதை கேட்க…

anubava paadam

என்ன குழந்தைகளே நீங்களும் உங்கள் அருகில் உள்ளவர்களின் அனுபவ கதைகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். எதோ வாழ்க்கைக்கு பயன்படும் ஒரு சிந்தனை எல்லா அனுபங்களிலும் இருக்கத்தான் செய்யும். இல்லை நம்ம சிரிக்க வைக்க உதவும் நகைச்சுவை அனுபவங்களும் இருக்கலாம்.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments