குழந்தைகளே, இன்னைக்கு, ஐஸ்கிரீம் குச்சியை வைத்து ஒரு அழகிய பொம்மை செய்யலாமா?
தேவையான பொருட்கள்
- ஐஸ்கிரீம் குச்சி
- வண்ணக் காகிதங்கள் / சிறிய துணி துண்டுகள்
- பசை
செய்முறை :
ஐஸ்கிரீம் குச்சியில், உங்கள் பொம்மைக்கு, மேலாடை மற்றும் பாவாடை, இரண்டையும் காகிதம் அல்லது துணி கொண்டு ஒட்டிக் கொள்ளுங்கள். காகிதத்தை ஒட்ட சாதாரண பசையே போதும். துணி துண்டுகள் பயன்படுத்துவது எனில் அதற்கென்று இருக்கும் பிரத்யேக பசையை ( fabric glue) பயன்படுத்துங்கள்.

அடுத்து, பொம்மையின் முகம். மெல்லிய அட்டையில் பொம்மையின் தலை, கண், மூக்கு, வாய் போன்றவற்றை வரைந்து கொள்ளுங்கள். அதை, அந்த ஐஸ்கிரீம் குச்சியின் மேல் பகுதியில் ஒட்டி விடுங்கள். உங்கள் பொம்மை தயார். தேவதை பொம்மை போல் அலங்கரிக்க விரும்பினால், ஒளி வட்டம், இறகுகள் செய்து ஒட்டிக் கொள்ளுங்கள்.
இந்த பொம்மை தானாக நிற்காது. இதனை புத்தகக் குறியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.