ஸ்நோபாப்பாவும் அதிசயக்கடலும்

ஆசிரியர் – விட்டில்.

அனன்யா பதிப்பகம், தஞ்சாவூர்.

விலை ரூ 90/-

அதீத கற்பனையும், அதிசயங்களும் நிறைந்த, எட்டு வயது குழந்தைகளுக்கான இந்நாவலில், ஸ்நோ பாப்பா எனும் சிறுமி ஆற்றுக்குள் விழுந்து விடுகிறாள்.  பின்னர் அவள் ஆறு போன போக்கில் பயணித்து முடிவில் கடலைச் சென்றடைகிறாள்.  அங்கே அற்புதமும், அதிசயங்களும் நிறைந்த உலகைக் காண்கிறாள்.

கடலிலேயே மிகச் சிறந்த மருத்துவராகக் ஆவுளியா என்ற கடல் பசு இருக்கின்றது. பாப்பாவைத் தூக்கிக் கொண்டு, அன்னப்பறவை போல்  ஜெல்லி மீன் நீந்துகிறது.  அழகும் ஆபத்தும் கொண்ட காளான் தோட்டம், முயல் கூடு தீவில் வசிக்கும் துறவி நண்டு, பறக்கும் மின்மினி தீவைக் காவல் காக்கும் நீலநிற சுறா மீன், அத்தீவில் வசிக்கும் வீர தீரமிக்க ஆந்தைகள் எனப் பல அதிசயங்களைக் கண்டு, பாப்பா வியக்கிறாள்.

கடலுக்கடியில் ஒற்றைக் கண்ணும், மான் தலையும் கொண்ட மீனின் கண்ணாடி மாளிகை ஒன்று உள்ளது.  அங்கே விதவிதமான மீன்கள் சீட்டாடும் சமயத்தில், ஒரு செய்தியை எடுத்துக் கொண்டு பதற்றமாக  ஜியோகிலானி என்கிற ஆமை வருகின்றது. அது என்ன செய்தி? என்பதைத் தெரிந்து கொள்ள கதையை வாசியுங்கள்,

கடலில் கொட்டப்படும் நெகிழியின் விளைவாக, கடல் மாசடைந்து கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன என்ற முக்கியமான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்து, இக்கதை வழியே குழந்தைகள் மனதில் பதிய வைக்கப்படுகின்றது. அவசியம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *