ஒரு பூ ஒரு பூதம்

https://www.commonfolks.in/books/d/oru-poo-oru-bootham

ஆசிரியர் மருதன்

வெளியீடு:- வானம் பதிப்பகம், சென்னை-

விலை ரூ 70/-

இத்தொகுப்பில் இது 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கான 12 கதைகள்  உள்ளன. இவை பல மொழிகளிலிருந்து, தமிழாக்கம் செய்யப்பட்டவை.  

முதல் 3 கதைகள், கதையின் வழியே அறத்தை மறைமுகமாகப் போதிப்பவை. “25 வது ஆடு எங்கே?” என்ற கதையில், ரிவாஸின் புத்திசாலித்தனத்தையும், பண்ணையாரின் முட்டாள்தனத்தையும் குழந்தைகள் பெரிதும் ரசிப்பார்கள்.

6 வது கதையான “என்னால் பார்க்கமுடியவில்லை” என்ற கதையின் முடிவு, யூகிக்க முடியாதவாறு நகைச்சுவையுடன் அமைந்து இருந்தது.  “மியாவ் தத்துவம்” கதை குழந்தைகளைச் சிந்திக்கத் தூண்டுவது. இது சிறுவர்க்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்கான கதையும் கூட.

“ஒரு பூ, ஒரு பூதம்” ஏற்கெனவே வாசித்திருந்த கதை ஒன்றினை நினைவுபடுத்தியது.  “ஒரு சிறுமியும், பனிரெண்டு நண்பர்களும்” யூகிக்க கூடிய முடிவுடன் கூடிய, வழக்கமான கதை தான். நாயும் பூனையும் இன்று வரை விரோதியாக இருப்பதற்கான காரணத்தைக் கூறும் கதையும், “சிங்கமும் சிறு வண்டும்” கதையும், குழந்தைகளைப் பெரிதும் மகிழ்விக்கக் கூடியவை. அவசியம் வாங்கிக் கொடுத்துக் குழந்தைகளை வாசிக்கச் செய்யுங்கள்.

https://www.commonfolks.in/books/d/oru-poo-oru-bootham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *