வேட்டையாடு விளையாடு

https://crownest.in/product/vettaiyaadu-veliyaadu/

வேட்டையாடு விளையாடு

ஆசிரியர் பேராசிரியர் சோ.மோகனா

புக்ஸ் பார் ஃசில்ரன், சென்னை (+91) 8778073949

விலை ரூ 80/-

இந்நூலில் பல்வேறு காட்டுயிர்களின் வாழ்க்கை முறையை, குறிப்பாக அவை வேட்டையாடும் முறையைப் பற்றிப் பேசும் 20 கட்டுரைகள் உள்ளன.  மனிதன் வேட்டையாடுவதற்கும், விலங்குகள் வேட்டையாடுவதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. விலங்குகள் தங்கள் உணவுத் தேவைக்காகப் பசியிருந்தால் மட்டுமே, வேட்டையாடக் கூடியவை. 

முதல் கட்டுரையில் சிங்கம் உயிர்வாழ வாரத்துக்கு 108 கிலோ உணவு வேண்டும்;. தாக்குதல் நடத்தும்போது, நீளவாக்கில் 40 அடிதூரம் ஒரே பாய்ச்சலாகப் பாயும் என்பன போன்ற சிங்கம் குறித்த விபரங்கள் சொல்லப்பட்டுள்ளன. தங்கநிறக் கழுகுகள் பறவைகளின் அரசன் என்று அழைக்கப்படுகின்றது; கடல்நீருக்குள் உலவும் அசுர கொலையாளி வெள்ளைச்சுறா; முதலை 150 கோடி வருடங்களுக்கு முந்தைய வரலாற்றுப் பின்னணி உடையது;  புலி ஒரு தனிமை விரும்பி; உலகின் அழியும் பட்டியலில், புலி தான் முதலிடம் வகிக்கிறது போன்ற, நமக்குத் தெரியாத பல சுவாரசியமான தகவல்களை இந்நூலில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். பலவிதமான பறவைகள் பற்றியும், இந்நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

நம் பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமானதல்ல’ அனைத்து உயிர்கட்கும் சொந்தமானது. பூமியைப் பாதுகாத்து, நம் சந்ததிக்கு விட்டுச் செல்வது நம் அனைவரின் கடமை என்று ஆசிரியர் இந்நூலில் வலியுறுத்தியிருக்கின்றார். காட்டுயிர்கள் பற்றியும், அவை வேட்டையாடும் முறை பற்றியும் சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் அறிந்து கொள்ள இந்நூல் உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *