ஜிமாவின் கைபேசி

சிறார் அறிவியல் கதை

ஆசிரியர்:- கொ.மா.கோ.இளங்கோ

புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18.

விலை ரூ 50/-

மூன்றாம் வகுப்பு மாணவியான ஜி.மானஸாவுக்கு, (சுருக்கமாக ஜிமா) ஒரு கைபேசி பரிசாகக் கிடைக்கின்றது. ஒரு புத்தகத்திலிருந்து ஒரு பெண்ணின் படத்தை வெட்டியெடுத்து, ‘சிம் கார்டு’ போலக் கைபேசியில் செருகியவுடன், அதற்கு உயிர் வந்துவிடுகின்றது.

கைபேசி உயிர் பெற்றவுடன், ஓர் அழகான பெண் திரையில் தோன்றி ஜிமாவுடன் உரையாடுகிறாள். அவள் பெயர் டிப்பி.  பல புதிய அறிவியல் தொழில்நுட்ப ஐடியாக்களை, டிப்பி மூலம் ஜிமா தெரிந்து கொள்கிறாள். அறிவியல் அறிஞரின் தொடர்பும், அவளுக்குக் கிடைக்கின்றது.  பள்ளி அறிவியல் கண்காட்சியில், பல புதிய மாதிரிகளை ஜிமா உருவாக்கிப் பரிசு பெறுகிறாள். 

டிப்பி மூலம் இன்னும் அவள் என்னென்ன புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டாள்?  டிப்பிக்குக் கடைசியில் என்ன ஆனது? என்று தெரிந்து கொள்ள, கதையை வாசியுங்கள்.

எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரக்கூடிய பல புதிய அறிவியல் தொழில்நுட்ப விஷயங்களைச் சிறுவர்க்குச் சுவாரசியமாகச் சொல்லி, அறிவியலில் நாட்டம் ஏற்படுத்தும் சிறந்த சிறார் அறிவியல் புனைகதை.   .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *